நான் ப்ரொபோஸ் பண்ணினேன்... என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்!
ஹேப்பி வேலண்டைன்ஸ் டே சொல்கிறார் பவித்ரா லட்சுமி
‘‘பொங்கல் அன்னைக்கு நான் ஹீரோயினா நடிச்ச படம் ரிலீஸ்... இப்ப நினைச்சாலும் கனவு மாதிரி இருக்கு...’’ கண்கள் விரிய பேசுகிறார் ‘நாய் சேகர்’ பட நாயகி பவித்ரா லட்சுமி. இணையவாசிகள் எல்லாம் ஹார்ட்டின் போட்டு அம்பு விடுறாங்களே! அப்படி என்ன மேஜிக்?
 தெரியலை... நான் நானா இருக்கேன். அதுதான் காரணம்னு நினைக்கறேன். அடுத்து மலையாளத்தில் ‘உல்லாசம்’ படம் மூலம் அறிமுகமாகப்போறேன். தொடர்ந்து கதிர், நட்டி சார் ஆக்டிங்ல ‘யூகி’ படம். இந்தப் படம் மலையாளத்திலே ‘அதிர்ஷ்யம்’ என்கிற பெயர்ல ரிலீஸ். தமிழ், மலையாளம் ரெண்டு மொழிகள்லயும் ரெடியாகியிருக்கு.
 கோயம்புத்தூர்தான் சொந்த ஊர். ஸ்கூல் எல்லாம் அங்கதான். NIFTல ஃபேஷன் டிசைனிங் படிச்சேன். அப்படியே மாடலிங், நடிப்பு மேலே ஆர்வம். 2015ல மிஸ் மெட்ராஸ் டைட்டில், 2017ல் குயின் ஆஃப் மெட்ராஸ். அப்படியே டிவி என்ட்ரீ... பிரபலமான நிகழ்ச்சிகள் அத்தனையிலும் வின்னர், ரன்னர்னு வரிசையா லைஃப் என்னைக் கூட்டிட்டுப் போனது. இப்ப இதோ ‘நாய் சேகர்’ படத்துல ஹீரோயின்.
நடிப்புக்கு உங்க இன்ஸ்பிரேஷன் யார் அல்லது எது?

ரெண்டரை வயசுல பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்பவே நான் ஆடும்போது என்னைப் பார்த்து மத்தவங்க ரசிப்பது, சிரிப்பது எனக்குப் பிடிச்சிருந்தது.
நாம யாரு அவங்க வாழ்க்கைல... ஆனா, நமக்காக சில மணி நேரங்களை அவங்க கொடுப்பது இந்த என்டெர்டெயின்மென்ட் துறைலதான். அந்த மக்களுடைய வரவேற்புதான் அடுத்து என்னனு என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்கும்னு நம்பறேன்.
 விஷயத்துக்கு வருவோம்... காதல்னா என்ன?
உலகம் மெட்டீரியலிஸ்டிக்கா ஆகிடுச்சு. அதையெல்லாம் கடந்து எதிர்பார்ப்புகள் இல்லாம கொடுக்கற அன்புதான் காதல். அம்மா, அப்பாவாவே இருந்தா கூட, குழந்தைகள்கிட்ட எந்த எதிர்பார்ப்பும், கண்டிஷனும் இல்லாம இருக்கற உறவு தான் காதல். இது குழந்தைகளுக்கும் பொருந்தும். அவங்க பெற்றோர்கிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம பழகினாஅது காதல்லதான் சேரும்.
இதுவரை காதலர் தினம் எப்படி இருந்துச்சு... இந்த வருஷம் எப்படி இருக்கும்?
ஒரு பிளானும் இல்ல. சிங்கிளா சுத்திக்கிட்டு இருக்கேன்... வழக்கம் போல இந்த வருஷமும் எனக்கு நானே ‘அலைகள் ஓய்வதில்லை’ மோட்தான். ஒரே ஒரு ஸ்பெஷல் இந்த வருஷம் ஷூட்டிங்ல கொஞ்சம் பிஸி.
எப்படிப்பட்ட பசங்களைப் பிடிக்கும்?
உட்கார்ந்து கதை பேச நிறைய டாபிக் வெச்சிருக்கும் பையனா இருக்கணும். முட்டக் கண்ணு இருக்கற பசங்க... குறும்புத்தனமா இருந்தா பிடிக்கும். கிரியேட்டிவ்வா சிந்திச்சா பிடிக்கும். சில பசங்க பயங்கர படிப்ஸ் லுக்ல இருப்பாங்க. ஆனா, இதெல்லாம் சேர்த்து செஞ்ச சிலை மாதிரி ஒரு பையன் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். இதுல ஒண்ணு இருந்தாலும் ஓரக்கண்ணுல சைட் அடிப்பேன்.
கிரஷ் மற்றும் பிடிச்ச நடிகர் யார்?
அடிக்கடி நானே சொல்லியிருக்கேன்... சிம்பு மேலே ஒரு கிரஷ் உண்டுனு. பிடிச்ச நடிகர் சொல்லணுமா... நம்ம இளையதளபதி விஜய் சார்தான் அவர் மேலயும் ஒரு மரியாதையான கிரஷ்னு சொல்லலாம்.
உங்க ட்ரீம் பாய் உங்க முன்னாடி வந்தா எப்படி ப்ரொபோஸ் செய்வீங்க?
ஏற்கனவே ப்ரொபோஸ் சம்பவம் எல்லாம் நடந்துடுச்சு. வருஷம் வேண்டாம்... நானே அனுப்பின ஒரு ப்ரொபோஸ் அனுபவம் சொல்றேன். ஒருத்தரை ரொம்பப் பிடிச்சுப் போயி மெயில்ல லவ் லெட்டர் அனுப்பினேன். அட ஷாக்கைக் குறைங்க... ஆமா, நானும் ஒன் சைட் லவ்ல மாட்டின ஆளுதான்! ஆனா, ஓகே ஆகல. சோகங்கள் பாஸ்!
ஒருவேளை லவ், கல்யாணம்னு வீட்ல சொன்னா அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்கும்..?
நான் பயந்த விஷயமே என் கரியர்தான். அதுக்கே அம்மா ஹேப்பி ஸ்மைலி போட்டுட்டாங்க. காதல், கல்யாணத்துக்கு எல்லாம் பெரிய ரியாக்ஷன் வராது. என்மேல இப்ப அவங்களுக்கு பெரிய நம்பிக்கை வந்திடுச்சு... அப்பறம் என்ன... ஆனா, ஒண்ணு... இதுக்கு முதல்ல லவ் செட் ஆகணும்!
ஷாலினி நியூட்டன்
|