வலைப்பேச்சு



@joseph_offcl - எல்லா டீமும் டோர்னமெண்ட் ஆரம்பிக்கும் முன்னாடி ப்ராக்டீஸ் மேட்ச் ஆடுவாங்க... ஆனா, இந்தியா மட்டும் டோர்னமெண்ட்டை முடிச்சுகிட்டு 3 ப்ராக்டீஸ் மேட்ச் ஆடிருக்கு... தட்ஸ் இட்..!

@Coimbatoraan - கட்சில குடுக்கறதுல கட்சிக்காரன் ஸ்டிக்கர் தான்டா ஒட்டுவானுக... ஜெயலலிதா மாதிரி கவுர்மெண்ட் குடுக்கறதுல ஸ்டிக்கர் ஒட்டியா குடுத்தானுக... மெண்டலு
களா!

@Ramanujam Govindan - மேடம்! நேத்து நைட்டு சாப்பிடலையா நீங்க?
ஆமாம்! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
வழக்கமா தினமும் ஐந்து வேளை நீங்க சாப்பிடும் ஐட்டத்தை ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவீங்க... நேத்து நைட்டு போடல. அதான் கேட்டேன்..!

@naaraju - ஒண்ணுமில்ல... தீபாவளிக்குச் செஞ்ச குலோப் ஜாமூன் நல்லாருக்கான்னு கேட்பா... கேவலமா இருக்குன்ற எளிய உண்மையை மட்டும் சொல்லிப் பாருங்களேன்... வீடிலில்லாதவனின் பூனையை, கோயில் யானை துரத்தி வந்து மிதித்தாற் போல் அமையும் உங்கள் வாழ்க்கை..!

@Karl Max Ganapathy - Find your next job fasterனு ஒரு ஆப்ஷன் காமிக்கிறான் மார்க். ஒரு பேச்சுக்கு அது வழியா போயி நாம வேலை தேடுறோம்னு வையி, நாம இங்க பண்ணுற பெர்ஃபார்மன்ஸ் பாத்துட்டு எவனாவது வேலை தருவானா நமக்கு!

@sultan_Twitz - இனிமேலாவது ஸ்டாலின் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி.
10 வருசமா ஆட்சில இருந்து ஐயா அறுத்து தள்ளிட்டாரு..?!

@DrHolyhemp - இப்ப சென்னைல இருக்கவங்களுக்கு ப்ளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, ரோட்டுல குப்பை போடக்கூடாது, சட்டத்துக்கு புறம்பா கட்ற கட்டடத்துல வீடு வாங்கக் கூடாதுனுலாம் தோணும்... பயப்படாதீங்க, தண்ணி வடிஞ்சதும் அதெல்லாம் சரியாகிரும்!

@mohanramko - குழந்தைகள் டூ பேரண்ட்ஸ் - எங்களை ஸ்கூலுக்கு அனுப்பவே முடியல இல்ல..!

@சாத்வீக சைத்தான் - ‘எங்க தாத்தா ஊதுபத்தி வித்த ஒரு சிறுவணிகர், உங்க தாத்தா பீடி சுத்தியும், பேப்பர் போட்டும் படிச்சு இஞ்சினியர் ஆனவரு...’ என்பதை என் பிள்ளைகளுக்கு அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன். என் பிள்ளைகள் எலைட் பச்சிலை புடுங்கிகளாக வளர்வதை நான் விரும்பவில்லை...

@angry_birdu - 2020 செப்டம்பர்லதான் சிவி சண்முகம் திறந்து வெச்சாரு. அடுத்த ஜனவரி மாசமே ஓர் இடத்துல உடைஞ்சுது.
இப்ப இன்னொரு இடத்துலயும் உடைப்பு. இதுதான் கடைசி சான்சு, இதுக்கும் அப்புறம் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லைன்னு வெறித்தனமா சுருட்டியிருக்கானுங்க.

@Saravanakarthikeyan Chinnadurai - உண்மையில் உழைக்க அவசியமே இல்லாத, உடம்பு நோகாமல் தண்டச்சோறு தின்று கொண்டு, ஜன்னல் வழி உலகை வேடிக்கை பார்க்கும் ஆட்களுக்குத்தான் மழையை ரசிக்க முடியும். மற்றவர்க்கு மழை என்பது எரிச்சல், மழை என்பது சுமை, மழை என்பது சனியன்.

@Vinayaga Murugan - எங்க தெருவுல கொட்டுற மழைல ஒருத்தர் ரெயின்கோட் போட்டுட்டு இருசக்கர வாகனத்தில் வெளியே போனார். ஏதோ அவசரம்போலன்னு விசாரித்தால் செம்பரம்பாக்கம் ஏரில இருந்து தண்ணி வருதாம். மியாட் மருத்துவமனை பக்கத்துல இருக்கற பாலத்தை வேடிக்கை பார்க்கப்போறேன்னு சொல்லிட்டு போறார்.  ஊர்ல வெள்ளம், சுனாமி எது வந்தாலும்  இப்படித்தான் சில செக்கிங் ஆபீசர்கள் கிளம்பிடுறாங்க!

@iam_nithankrish - முல்லைப் பெரியாறு அணையை ஒரு லட்சம் பேருடன் சென்று தமிழக பாஜக முற்றுகையிடும் - அண்ணாமலை.
ஒரு லட்சம் ‘பேருடன்’ இல்ல முருகேசா... ஒரு லட்சம் ‘சேருடன்’!

@Ntramesh_kpm - அப்பாவின் முழுக் கை சட்டைதான் குளிர்காலத்தில் பிள்ளைகளுக்கு ஸ்வெட்டர்...

@ItsJokker - சென்னையன்ஸ் -  இல்ல, போன ஆட்சில ‘மழைநீர் வடிகால் திட்டம்’னு 1800 கோடி ரூபாய்க்கு ஒரு திட்டம் போட்டானுங்க... அவனுங்களதான் தேடுறேன்...

@Shobana Narayanan  - நிருபர்: மேடம் உண்மைய சொல்லுங்க... ஃபேஸ்புக்ல நீங்க யாரு?
மீ: முன்னாள் போராளி, முன்னாள் பெண்ணிய பீரங்கி. இப்போ அப்ப அப்ப பொங்குவேன்... (‘பாட்சா’ மோட்)
நிருபர்: இன்ஸ்ட்டால அக்கவுண்ட் திறந்திங்களே... அங்க என்ன பண்றீங்க?
மீ: டெய்லி கோலம்ஸ்னு ஒரு எட்டு புள்ளி கோலம் புரோபைல ஃபாலோ பண்ணிட்ருக்கேன்... (மாணிக்கம் மோட்).

@LAKSHMANAN_KL - டிமானிடைசேஷன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிச்சாச்சா அண்ணே..?
ஒட்டுமொத்த பணத்தையே ஒழிச்சாச்சு... போவியா?!

@JamesStanly - வாங்க வந்தது 2 முட்ட பப்ஸ்... இதுல ஸ்டார்பக்ஸ் இருக்கா... ஸ்டார் டிவி இருக்கானு சோகங்கள் வேற...

@manipmp - போனசும்
தீபாவளியும் ஒண்ணுதான்...
வர்றதும் தெரியாது போறதும் தெரியாது!

@directorcheran - மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்... இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா... இந்த ஃபைல முதல்ல எடுங்க @CMOTamilnadu அய்யா... என்று தனியும் இந்த....