டிரைவர் இல்லாத வாகனம்!



கடந்த வாரம் டுவிட்டரில் ஹிட் அடித்து செம வைரலானது ஒரு வீடியோ. அந்த வீடியோவில் 40 வயதைத் தாண்டிய ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து ஹாயாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.
இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அந்த வண்டியை யாருமே ஓட்டவில்லை. அவர் மட்டுமே பின்னாடி அமர்ந்திருக்க, வண்டி ஒரே நேர்கோட்டில் வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த அளவுக்குத் தன்னை சமநிலைப் படுத்தி வாகனத்தில் எந்தவித பதற்றமுமில்லாமல் அமர்ந்திருந்தார் அவர்.

இந்த அரிய காட்சியை முக்கிய பிரபலங்கள் பகிர, ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். டிரைவரே இல்லாமல் வண்டியை ஓட்டும் அந்த நபரைப் பற்றிய எந்த விவரமும் வெளிவரவில்லை.

சில மாதங்களுக்கு முன்பு டிரைவர் இல்லாத வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக சொல்லியிருந்தார் உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க். ‘‘எங்கள் ஊரில் முன்பே டிரைவர் இல்லாத வாகனம் வந்துவிட்டது எலன் மஸ்க்...’’ என்று நெட்டிசன்கள் கமென்ட்டிக் கொண்டிருக்கின்றனர்.

த.சக்திவேல்