ஹம் தோ ஹமாரே தோ
தீபாவளி ஸ்பெஷல் சரவெடியாக ‘ஹாட்ஸ்டாரி’ல் இறங்கியிருக்கிறது ‘ஹம் தோ ஹமாரே தோ’ எனும் இந்திப்படம். சிறுவனான துருவ் ஓர் அனாதை. சாலையோரத்திலிருக்கும் ஓர் உணவகத்தில் எடுபிடி வேலை செய்கிறான். அங்கிருந்து ஓடிப்போய் நன்றாகப் படித்து விர்ச்சுவல் ரியாலிட்டி துறையில் தொழிலதிபராகிவிடுகிறான். சமூகத்தில் எவ்வளவு பெரியாளாக வளர்ந்துவிட்டாலும் தனக்கென ஒரு குடும்பம் இல்லையென்பது துருவ்வைக் கவலைக்குள்ளாக்குகிறது.
இந்நிலையில் அவனது புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஆப் அறிமுக விழாவில் ஆன்யா என்ற சோஷியல் மீடியா பிரபலத்தைச் சந்திக்கிறான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, மாமாவின் வீட்டில் வளர்ந்தவள் ஆன்யா என்பதை அறிகிறான் துருவ். ஆன்யாவின் மீது துருவ்விற்கு காதல் மலர்கிறது.
தான், ஓர் அனாதை என்பதை மறைத்து ஆன்யாவைக் காதலிக்கிறான். ஆன்யாவும் துருவ்வின் காதலை ஏற்றுக்கொள்கிறாள். பெற்றோருடன் வந்து பெண் கேட்கச் சொல்கிறாள் ஆன்யா. போலியாக பெற்றோரை ஏற்பாடு செய்கிறான் துருவ். இது என்ன மாதிரியான விளைவுகளை துருவ்வின் திருமணத்தில் ஏற்படுத்துகிறது என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை. வழக்கம் போல நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் துருவ்வாக நடித்த ராஜ்குமார் ராவ். படத்தின் இயக்குநர் அபிஷேக் ஜெயின்.
தொகுப்பு:த.சக்திவேல்
|