லவ் ஹார்டு



‘நெட்பிளிக்ஸி’ன் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கும் ஆங்கிலப் படம் ‘லவ்ஹார்டு’. டேட்டிங் ஆப்பில் தனக்கான சரியான துணையைத் தேடுகிறாள் நடாலியா. ஆனால், கிடைப்பது எல்லாம் ஏமாற்றம்தான். இந்த டேட்டிங் அனுபவங்களையே கட்டுரையாக மாற்றுவதுதான் அவளது வேலையும் கூட. இந்நிலையில் டேட்டிங் ஆப்பில் ஜோஸ் என்ற இளைஞன் அவளுக்கு அறிமுகமாகிறான். டேட்டிங் ஆப்பின் புரொஃபைலில் இருக்கும் ஜோஸின் புகைப்படம் அவளை வசீகரிக்கிறது. ஜோஸுடன் சாட்டிங் செய்து காதலை வளர்க்கிறாள் நடாலியா.

கிறிஸ்துமஸ் வருகிறது. ஜோஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக அவனது வீட்டைத் தேடிச்செல்லும் நடாலியாவுக்கு செம அதிர்ச்சி. ஆம்: புரொஃபைலில் இருக்கும் ஜோஸுக்கும் நேரில் பார்ப்பதற்கும் மலையளவு வித்தியாசம். யாருடைய புகைப்படத்தையோ வைத்து ஜோஸ் தன்னை ஏமாற்றிவிட்டதாக உணரும் நடாலியா உடைந்து போகிறாள்.

இதை எப்படி ஜோஸ் கையாள்கிறான்... தனக்கான துணையை நடாலியா எப்படி கண்டுகொள்கிறாள் என்பதே ரொமான்டிக் திரைக்கதை. டேட்டிங் ஆப் கலாச்சாரத்தின் விளைவுகளை அழுத்தமாகப் பதிவு செய்யும் இப்படம் உண்மையிலுமே எது காதல் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறது. ஜோஸாக கலக்கியிருக்கிறார் ஜிம்மி ஓ.யாங். படத்தின் இயக்குநர் ஹெர்னன் ஜிமினேஷ்.