Hot கிசு கிசு
ஹாட் கேஷ் பார்த்ததும் சம்மதித்த நடிகர்!
தேசிய விருது வாங்கிய இயக்குநர் இப்போது காமெடி நடிகர் ஒருவரை ஹீரோவாக்கி இயக்கி வருகிறார். காமெடியும் அப்படத்துக்காக கெட்டப் எல்லாம் மாற்றியிருக்கிறார். படத்தில் வலுவான ஒரு கேரக்டருக்கு சக்சஸ் ஹீரோ கம் வில்லன் நடிகரை அப்ரோச் செய்திருக்கிறார்கள். அவர் மறுக்கவே இவர்களும் சளைக்காமல் ஃபாலோ செய்திருக்கிறார்கள்.
 அதுவும் எப்படி? இன்னொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்த நடிகரை அவரது கேரவனிலேயே சந்தித்து, கொண்டு போன சூட்கேஸை திறந்து காட்டியிருக்கிறார்கள். அதில் லம்ப்பாக ஹாட் கேஷ் ஒன்றரை கோடி மினுமினுக்க... நடிகர் கண்களும் ஜொலிஜொலித்திருக்கின்றன. ‘அஞ்சாறு நாள் கால்ஷீட் போதும்... மீதியை ஷூட்ல தர்றோம்...’ என்றதும் ‘உங்களுக்கு இல்லாத கால்ஷீட்டா...’ என வாயெல்லாம் பல்லாக சம்மதித்திருக்கிறார் அந்த நடிகர்.
இயக்குநரை மயக்கிய ‘ஷ்’!
இண்டஸ்ட்ரீயே ‘அப்படியா...’ எனக் கேட்டு வாய்பிளக்கிறது. ஹார்ட் அட்டாக் வந்த இயக்குநர் அவர். இண்டஸ்ட்ரீயில் ட்ரிப்பிள் குட் நேம் எடுத்தவர். விருதெல்லாம் குவித்தவர். இப்போது தனது ஹார்ட்டை செம கூலான ‘ஷ்’ஷிடம் பறிகொடுத்திருக்கிறார்.
 செம ரெட் படத்திலிருந்து இருவருக்குமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ‘ஷ்’ஷின் லொடலொட பேச்சில் இம்ப்ரஸ் ஆகியதில் ஒரு கட்டத்தில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஆகவே மாறிப்போனார் நடிகை.
ட்ரீம் புராஜெக்ட்டிலும் சிறகடிக்க நடிகை விரும்ப... ஆடிஷனுக்கு வரச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அங்கே பொண்ணு தேறாததால், ஆறுதல் சொல்லி அசத்தலாக வேறொரு ஆஃபர் கொடுத்து சமாதானப் படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
தாய்க்குலத்தின் டார்ச்சர்!
நீண்ட வருட போராட்டத்திற்குப் பின் இங்கே ஒரே ஒரு ஹிட் கொடுத்து ‘ராசி எல்லாம் ஒண்ணும் இல்ல... எல்லாம் கிருப’ என மகிழ்ந்த டான்ஸ் பேபி, மறுபடி யும் ஆந்திராவில்தான் சலசலக்கிறார்.
 அவரிடம் சமீபத்தில் கதை சொல்ல ஒரு அறிமுக இயக்குநர் போனில் அப்ரோச் செய்திருக்கிறார். போனை எடுத்த நடிகையின் தாய்க்குலம், ‘தம்பி... இதுக்கு முன்னாடி என்ன படம் பண்ணியிருக்கீங்க? எத்தனை ஹிட்ஸ் கொடுத்திருக்கீங்க..?’ என கேள்வி மேல் கேள்வி கேட்டு இண்டர்வியூ பண்ணியதில் கடுப்பான இயக்குநர் போனை துண்டித்துவிட்டாராம்.
அரை சதம் கேட்ட ஃப்ளாப் நடிகர்!
டாப் ஹீரோவை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்து, ஃப்ளாப் ஒன்றும், ஹிட் ஒன்றும் கொடுத்த கம்பெனி, மறுபடியும் அதே ஹீரோவிடம் கால்ஷீட் கேட்டுப் போனார்கள். ‘ஓயெஸ் தாராளமா பண்ணலாம்...’ என க்ரீன் சிக்னல் கொடுத்த ஹீரோ, தலையைச் சிலுப்பியவாறு ‘பேமென்ட்டா சதம் வேணும்....’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியதில் ஆடிப்போனதாம் கம்பெனி.
முந்தைய படங்களுக்கு கொடுத்த சம்பளமே கொடுக்கறோமே என சொன்னதற்கு ஹீரோ மசியவில்லையாம். இவர்களும் பதிலை எதிர்பார்த்து தலையைச் சொறிந்து கொண்டே நின்றதில், ஹீரோ ஒரே வரியில் ‘யோசிச்சு சொல்றேன்’ என சொல்லிவிட்டதாக சொல்கிறார்கள்.
மிமிக்ரி செய்யும் மீம்ஸ்!
எதுவும் கமிட் ஆகாததால், வீட்டில் ஹாயாக இருக்கிறார் டாப்பில் கிடுகிடுத்து ஓய்ந்த மீம்ஸ் காமெடி நடிகர். ஆனாலும் அவருக்கு ரசிகர்களின் போன் அழைப்புகள் நின்றபாடில்லை. வெளிநாட்டு போன்கால்கள் என்றால், ‘சொல்லுங்கண்ணே...’ என ஆல் டீத்தும் ஆனந்தமாக சிரித்தும், உள்ளூர் அழைப்பு என்றால் ‘நான் போலீஸ் ஆபீசர் பேசுறேன்... உங்களுக்கு யார் வேணும்..?’ என பேஸ் வாய்ஸில் மிமிக்ரி செய்தும் கால்களைத் தவிர்க்கிறாராம். ‘என்னத்த சொல்ல... மனுஷனுக்கு லோக்கல்னாலே இளக்காரம்தான்...’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமாக முன்பு இருந்தவர்கள்.
ஷியஸ்
|