வலைப்பேச்சு



@manuvirothi  பூமிக்கடியில் ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரும் திட்டம் பிப்ரவரி 33ம் தேதி தொடக்கம்!

@teakkadai1  எல்ஐசி... டாக்ஸ் பெனிபிட்டுக்காக எக்கச்சக்க மிடில் கிளாஸ் போட்டாங்க. என்ன ஆகுமோ தெரியலை. கொஞ்சம் பங்குகள் மட்டும் வித்துட்டு அரசே வச்சுக்கிட்டா நல்லாயிருக்கும். முழுக்க தனியார்மயமாச்சுன்னா நாமம்தான்.

@moderndravid  பவானி ஆளுகலாம் ‘ப’னு பச்ச குத்திக்கிட்டு எல்லாமே ஃப்ரீயா கெடைக்கும்னு சொல்லுவானுகளே... அதுமாதிரி இந்த தேசபக்தர்களுக்கு ‘தே.ப.’னு பச்ச குத்திக்கிட்டு ஓசில எல்லாம் கெடைக்கிது போல... என்ன விலைவாசி ஏறுனாலும் அசால்ட்டா இருக்கானுக...

@thoatta  ஏன்டா இப்படி எல்லாத்தையும் வித்துக்கிட்டே இருக்கீங்க? எதாவது வாங்குங்கடா...
அதான் எதிர்க்கட்சி MLAக்களை வாங்குறோம்லண்ணே..!

@SanjaiGandhi - சாபம், கர்மா எல்லாம் பித்தலாட்டம் என்பது எல்லாரையும் விட நன்றாகத் தெரிந்தவர்கள் ஆள்கிறார்கள். மக்களின் சாபம், வயித்தெரிச்சல் எல்லாம் எதுவும் செய்யாது என்பதால் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

@Kannan_Twitz - இயல்பாவே குழந்தைத்தனத்தோட இருக்குற பெண்கள்தான் ரசிக்கிறமாதிரி இருக்காங்க!
வேணும்னே கொஞ்சிக் கொஞ்சி பேசறவங்களல்லாம் பார்த்தா ஒரு மாதிரி பாவமா தோணும்!!!

@ItsJokker - பிடித்தவர்களுக்காக ‘உங்களுக்கு பிடித்ததை’ எப்போதும் துறக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் ‘எப்போதும் அவர்களுக்கு பிடித்தமானவராய்’ இருப்பதில்லை..!

@Anitha200120 - கூண்டைக் காவலாய் நினைத்திருக்கும் பறவைகளுக்கு பசியைப் பற்றிய கவலைகள் ஏதுமிருக்காது!

@இந்திரா கிறுக்கல்கள் - மீ: இன்னிக்குத்தான் கொஞ்சம் முதுகுவலி குறைஞ்சாப்ல இருக்கும்மா.
மதர்: ஷ்ஷ்ஷ் சத்தமா சொல்லாத...
மீ: ஏன்... என்னாச்சு..?
மதர்: எல்லா வலிக்கும் காது இருக்கும். குறைஞ்சிடுச்சுனு நாம சொன்னா உடனே அதிகமாகிடும். எனக்குக்கூட சில நேரம், இப்போலாம் தலைவலியே வர்றதில்லேலனு தோணும். மறுநாளே தலைவலி வந்துடும்.

மீ: இப்பென்ன செய்ய?
மதர்: (ஹஸ்கி வாய்சில்) சத்தமா ‘வலிச்சு
கிட்டேதான் இருக்குது’னு சொல்லு... அது காதுல விழுகட்டும்!
மீ: ?! ?! ?!

@smbsultan - யாரையும் பிரமாண்டமாய் பார்க்கத் தேவையில்லை... அவர்களும் நம்மைப் போன்று ஆயிரம் பிரச்னைகளால் சூழப்பட்டவர்களே!

@Kayal82973707 - சண்டை போடுவதற்காகவே பேச ஆரம்பிப்பதை பேரன்பு என்ற கணக்குலதான் வரவு வைக்கணும்..!

@pradeepbala23 - என்ன உனக்கு எவ்வளவு புடிக்கும்..? ஏன் என்ன பிடிக்கல..?
- இந்த ரெண்டு கேள்விக்கும் உள்ள ஒற்றுமை என்னனா எத்தனை முறை கேட்டாலும் ஆசுவாசம் ஆகாது மனம் என்பதுதான்..!

@AravindRajaOff - 9வது பக்கத்துல விற்கப்போறேன்னு ஒரு லிஸ்ட் சொல்லிருக்கீங்க...11வது பக்கத்துல அதையே மீண்டும் உருவாக்கப் போறேன்னு சொல்லியிருக்கீங்க...அப்புறம் எதுக்கு விற்கணும்..? - பட்ஜெட் 2021

@samuelraja78 - உண்மைக்குப் புறம்பான நம்பிக்கையை முன் வைப்பதுதான் மிகப்பெரிய சூதாட்டம்!

@Bharu_twtz - ‘இனி யாரையும் நம்பவே கூடாது’ என்று முடிவெடுத்த பிறகே, கட்டாயமாய் யாரையேனும் நம்பியே தீரணுமென்ற சூழ்நிலைக்குத் தள்ளுகிறது வாழ்க்கை.

@EyeKiller_ - வேஷம் போடுவோர்களை கண்டுகொள்ளாமல் இருந்தால் பாசம் காட்டுவோர்கள், தானாகவே வந்துருவாங்க...

@Subbumeil - குடிக்கணும்னு முடிவு செய்துவிட்டால் சந்தோஷத்திற்கு மட்டும் குடிங்க... சோகத்திற்கு குடிக்க ஆரம்பித்தால் வாழ்நாள் முழுவதும் குடித்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கும்!

@Pa Raghavan - பட்ஜெட் வரும்போதெல்லாம் அதைப் புகழ்ந்தும் திட்டியும் பலபேர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். என் நண்பன் ஆர். வெங்கடேஷ், மாண்டேக் சிங் அலுவாலியா போலவே பேசுவான். கேட்கப் பொறாமையாக இருக்கும். பலமுறை பத்ரி பட்ஜெட் பற்றி பேசிக் கேட்டிருக்கிறேன். ஐஐடியில் இதெல்லாம் சொல்லித் தந்திருக்கிறார்களா என்று வியப்பாக இருக்கும்.

மறுபுறம், படிக்காத அரசியல்வாதிகள்கூட டிவியில் காரசாரமாக விவாதிப்பதைப் பார்த்திருக்கிறேன். தவறாகப் பேசினாலும் அதைப்பற்றிப் பேச அவர்களிடம் எப்படியோ சில நூறு சொற்களாவது இருக்கிறது. நானும் பல வருடங்களாக பட்ஜெட் அறிக்கையை வரி விடாமல் படிக்கிறேன். வருமான வரி உச்சவரம்பு மற்றும் அதுசார்ந்த சலுகைகள் அல்லது கழுத்து நெரிப்புகளைத் தாண்டி ஒரு கருமமும் புரிவதில்லை.

இந்த நாட்டில் பொருளாதாரம் குறித்த அக்கறையோ அறிவோ இல்லாத ஒரே ஜந்து நான்தான் என்று ஒவ்வோர் ஆண்டும் தோன்றுகிறது.  இந்த ஆண்டு தமிழக சாலைகளுக்கென ஒரு லட்சம் கோடி ஒதுக்கி இருப்பதாகப் படித்தேன்.  இதில் சோழவரம் நகர் - சிஎல்சி ரோடு இணைப்புச் சாலை போட எத்தனை ஆயிரம் ரூபாய் ஒதுக்குவார்கள் என்று மட்டும் யாராவது விசாரித்துச் சொன்னால் புண்ணியமாகப் போகும். சனியன், வண்டியை எடுத்துக்கொண்டு நாலு தப்படிகூடப் போக முடிவதில்லை. முதுகு வலி கொன்று எடுத்துவிடுகிறது. அவ்வளவு மோசம்.

@Paadhasaari Vishwanathan - தீயசக்திக்கு கோயில் கட்டுவதும், தீயசக்தியை வழிபடுவதும், தீயசக்திகளை ஆராதிப்பதும், தமது தீயசக்தியின் வலிமை குன்றாமல் காத்துக் கொள்ளத்தான்!

@LonelyTwitz - தேடிச்சென்று பேசுவது தவறல்ல... தேடி வராதோரிடம் தேடிச்சென்று பேசுவதுதான் தவறு!

@Ramanujam Govindan - ஹலோ! மெக்கானிக்கா?
ஆமாம் சார்! சொல்லுங்க என்ன பிரச்சனை?
பொண்ணு ஆன்லைன் க்ளாஸ் அட்டெண்ட் பண்றா! ஆனா, சவுண்டு சரியா வரமாட்டேங்குது சார்!
சவுண்ட் வரலைன்னா நல்லதுதானே!

என்ன சார் சொல்றீங்க? என்ன நடத்தறாங்கன்னு கேட்க வேண்டாமா?
ஆன்லைன் க்ளாஸ் நடக்கும்போது மிக்ஸிலேர்ந்து சவுண்டு வந்தா தொந்தரவா இருக்காது? பாப்பா எப்படி கவனிக்கும்?
ஹலோ! நீங்க லேப்டாப் மெக்கானிக் இல்லையா?
லேப்டாப் ஸ்பீக்கர் வேலை செய்யலை!
நான் மிக்ஸி மெக்கானிக்குங்க!

@Ram Vasanth - படித்த பள்ளியை கடக்கையில் தொண்ணூறு எடுத்தவனுக்கு - ஆசிரியர் எங்கிருக்கிறாரோ..?  
முப்பத்தைந்து எடுத்தவன்..? - இன்றுவரை அவரோடு தொடர்பில் இருக்கிறான்.

Karl Max Ganapathy - கேரக்டர் ரோல் பண்றதுல மோடியா எடப்பாடியான்னா வின்னர் எடப்ஸ்தான். எங்க, மோடியை குல்லா போட சொல்லு பாப்போம்!

@Bogan Sankar - The linear and the circular
‘‘கடிகாரத்துல ஒன்பது மணி எங்கிருக்கு?’’
‘‘ங்கே?’’
‘‘கடிகாரத்துல ஒன்பது மணி எங்கிருக்கு?’’
‘‘அது வந்து... எட்டு மணிக்கு அடுத்தாப்ல...’’
‘‘அது இல்லீங்க. பொசிஷன்?’’
‘‘அதுவா? பீச்சாங்கை பக்கம்...’’

‘‘கடவுளே!’’
‘‘அங்கேதானுங்களே இருக்கு...’’
‘‘அதில்லை சார். இந்த ஸ்டீரிங்க ஒரு க்ளாக்கா நினைச்சுக்குங்க. அதில் எங்கிருக்கு?’’
நான் யோசித்து பின்பு கைவைத்துக் காண்பித்தேன்.
‘‘சரி. மூணு மணி எங்கிருக்கு?’’
‘‘இரண்டு...’’
- என்னய்யா, நாடறிஞ்ச ஓர் எழுத்தாளருக்கு கார் ஓட்டக் கத்துக் கொடுக்கறதா சொல்லி இப்படி அவமானப்படுத்தறீங்க?

@swaravaithee - அடுத்த பட்ஜெட் அப்போ, ‘என்ன பிச்சக்காரன் இவ்ளோ பணம் வெச்சிருக்கான்’னு சொல்லி அவனுக்கும் வரி போடப்
போறானுவ பாருங்களேன்...