Data Corner



*46.3 கோடி மாணவர்கள் கொரோனா தொற்றால், உலக அளவில் தொலைதூரக் கற்றலை அணுக முடியவில்லை.

*1,500 டன் தானியங்கள் இந்திய உணவு கார்ப்பரேஷன் குடோன்களில் சேதமடைந்துள்ளன.

*11 பேரில் ஒருவருக்கு தமிழகத்தில் புற்றுநோய் வரும் ஆபத்து காத்திருக்கிறது.

*112 ஆவது இடத்தில் உள்ளது உலகளாவிய பாலின குறியீட்டில் இந்தியா. இதில் மொத்தம் உள்ள நாடுகள் 153.

*20% மக்கள் மலச்சிக்கல் பிரச்னை காரணமாக மருத்துவர்களை நாடுகின்றனர்.

*20% இந்திய போக்குவரத்துத் துறை சுருங்கிவிடும் என்று மதிப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. அறிவித்துள்ளது.

*3.1% தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா கல்விக்காக செலவழித்ததாக 2019  20 பொருளாதார ஆய்வு காட்டுகிறது.

குறிப்பு: இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% கல்விக்காக செலவிட வேண்டும் என்று, 1968ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேசிய கல்விக் கொள்கையும் (NEP) கூறி வந்துள்ளது.

அன்னம் அரசு