Working From Road!



மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்த பாக்கன் ஜார்ஜ், ஆல்வின் ஜோசப், ரதீஷ் பலேராவ் ஆகிய மூன்று நண்பர்கள், சாலையில் தங்கியபடியே தங்கள் அலுவலக வேலைகளை (Working From Road) செய்துள்ளனர். அதாவது Work From Home மாதிரி!
இந்த மூவரும் ஒரு மாதத்தில் 1,687 கிமீக்கு அதிகமான தூரத்தைக் கடந்துள்ளனர். பயணத்தின்போது உள்ளூர் சாலையோர உணவகங்களில் சைக்கிள்களை நிறுத்தி, தற்காலிக பணி நிலையங்களை ஏற்படுத்தி தங்கள் வேலையைத் தொடர்ந்துள்ளனர்.

‘‘சைக்கிள் பயணம் சவாலானது என்றாலும், மதிப்புக்குரியது. சைக்கிள் ஓட்டுதல் ஒரு சுதந்திர உணர்வையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதை ஒரு வேலையாக உணரவில்லை...” என்கிறார் இந்த பயணத்திட்டத்தை வகுத்த 31 வயதான ஜார்ஜ். அதிகாலை 4 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கி, ஒரு நாளைக்கு 80 கிமீ சைக்கிள் ஓட்டியுள்ளனர். இந்தப் பயணத்திற்காக மூவருக்கும் தலா ரூ.25,000 செலவாகியுள்ளது. வெவ்வேறு வாழ்க்கை முறைகளை வெவ்வேறு இடங்களில் அனுபவித்த இவர்களுக்கு அவர்களது நிர்வாகமும் உறுதுணையாக இருந்துள்ளது!

அன்னம் அரசு