குட்டி தல!



சமீபத்திய டிரெண்டிங் ஹிட், இந்த ‘குட்டித் தல’தான். யெஸ். இங்கே அள்ளும் அழகில்  துள்ளல் சிரிப்பில் ஜொலிஜொலிப்பது அஜித்தின் மகன் ஆத்விக். ‘வலிமை’ ஷூட்டிங்கின் நடுவே சின்னதொரு பிரேக் கிடைத்ததால்... ரெஃப்ரெஷ் ட்ரிப்பாக வட இந்தியாவில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித்.  

இந்நேரத்தில் சென்னையில் நெருங்கியவர்களின் திருமணம். அதனால், அஜித்தின் சார்பில் மணமக்களை வாழ்த்த ஷாலினியும், செல்ல மகன் ஆத்விக்கும் கலந்து கொண்டார்கள். அங்கே ஆத்விக் புன்னகைத்து மகிழ்ந்த தருணங்களின் புகைப்படங்கள்தான் இப்போது வைரல் ஆகியிருக்கின்றன.  அதுசரி, லிட்டில் அல்டிமேட் ஆத்விக், இப்போது என்ன செய்கிறார் என விசாரித்தால் பூங்கொத்துகள் கொட்டுகின்றன!   

* அஜித்  ஷாலினி தம்பதியின் செல்லங்கள் அனோஷ்காவும், ஆத்விக்கும் பெற்றோரைப் போல, எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்ட்டிவிட்டீஸிலும் எக்ஸ்பர்ட்ஸ். குழந்தைகள் தாத்தா  பாட்டியின்  (ஷாலினியின் பெற்றோர்) அரவணைப்பில் இருப்பதால், எப்போதும் அவர்களின் அன்பில் திளைக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஓவியம் மற்றும் பாடங்களை ஷாம்லி கற்றுக் கொடுக்கிறார். அனோஷ்காவிற்கு ஸ்போர்ட்ஸிலும், ஆத்விக்கிற்கு மியூசிக்கிலும் ஆர்வம்.

* ஆத்விக் இப்போது யூகேஜி படிக்கிறார். வீட்டில் உள்ளோருக்கு வரும் போன் அழைப்புகளை எல்லாம் கவனமாக உற்றுக் கேட்கும் ஆத்விக், ‘அம்மா,  ஊ இஸ் ஸ்பீக்கிங்’ என போனைக் கேட்டு வாங்கி ‘ஹாய்...  ஹவ் ஆர் யூ’ எனச் சொல்லிவிட்டு தன் விளையாட்டைத் தொடர சென்று விடுகிறார். திடீரென குழந்தையின் மழலைக் குரல் கேட்பதால் எதிர்முனையில் இருப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.

குழந்தைகள் வீட்டில் நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பதால், வெளியுலகம் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே வீட்டில் உள்ளவர்களும் குழந்தைகள் போனில் பேசுவதையும், வெளியே ஃபங்ஷன்களுக்கு செல்வதையும் என்கரேஜ் செய்கின்றனர்.

* அயர்ன் மேன் அனிமேட்டட் சீரீஸை ஆத்விக் விரும்பிப் பார்க்கிறார். அஜித்தின் படங்களில் ‘மங்காத்தா’வும், ‘விஸ்வாச’மும் ஆத்விக்கின் ஆல் டைம் ஃபேவரிட் சாய்ஸ்.

* அஜித் வீட்டில் இருந்தால், குழந்தைகளுக்கு விருப்பமான டிஷ் எதுவோ அதை அவர்களிடமே கேட்டு தன் கைப்பட அதை செய்து கொடுத்து குஷிப்படுத்துவார். அப்பாவின் பிரியாணி, ஆத்விக்குக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமாம்.

* லாக்டவுனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால், குழந்தைகள் வீட்டில்தான் இருக்கிறார்கள். ஆத்விக், கீபோர்ட் அருமையாக வாசிக்கிறாராம். டான்ஸும் சூப்பராக ஆடுகிறாராம். பாட்டும் அருமையாகப் பாடுகிறாராம்.   

ஸ்கூல்தான் கிடையாதே தவிர, அனோஷ்கா மற்றும் ஆத்விக்குக்கு ஸ்பெஷல் கிளாஸ்கள், எக்ஸ்ட்ரா டேலன்ட்டுக்கான கிளாஸ்கள் ரெகுலராக இருப்பதால், அடம் பிடிக்காமல் இருவரும் சின்ஸியராகச் செல்கிறார்கள்.

மை.பா.