பைக்குக்கு ஆடு ஃப்ரீ!மூன்று ஷர்ட் வாங்கினால் ஒரு சட்டை; டிவி வாங்கினால் வாட்ச்; மிக்ஸி வாங்கினால் குக்கர் என இலவசங்கள்தான் பிசினஸை இயக்குகின்றன என்பதற்கு கீழேயுள்ள மேட்டரே சாம்பிள். பலரும் சோஃபா செட், மிக்ஸி என கிஃப்ட் கொடுக்க எக்ஸ்ட்ராடினரியாக யோசிப்போம் என்று நினைத்த தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி கிராம பைக் டீலர், பைக் வாங்கினால் ஆடு ஃப்ரீ என தாறுமாறு ஆஃபர் கொடுத்தார்.

அல்வா கிடைச்சிருச்சு என நான்கு நாள் ஆஃபரை ஜெயிக்க படையெடுத்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் படையைக் கண்டு ஐடியா சொன்னவருக்கே வாயில் நுரை தள்ளிவிட்டது. ஒரு ஆட்டுக்கு 3 ஆயிரம் என ஃபிக்ஸ் செய்த விலையும் எல்லை மீற, வேறுவழியின்றி ஆஃபரை வாபஸ் வாங்கி கம்பெனி பிழைத்துக் கொண்டது!