கேரளாவில் தலித் பூசாரிகள்!மதம், சாதி தாண்டி கல்வி முக்கியத்துவம் பெறும் காலமிது. கேரளாவில் திருவனந்தபுரம் தேவசம் போர்டும் அதைப் புரிந்துகொண்டதன் வெளிப்பாடே இந்த மறுமலர்ச்சி அறிவிப்பு. அரசு அமைப்பான தேவசம் போர்டு, கோயில்களில் பணிபுரிய 62 பூசாரிகளை செலக்ட் செய்தது முக்கியமல்ல. அதில் 36 பிராமணர்களல்லாதவர்கள் இருப்பது அருமை, புதுமை. அதில் ஆறுபேர் தலித்துகள்!

எழுத்து, நேர்முகம் ஆகிய முறையில், இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ‘‘இதில் உயர்வகுப்பில் 26 பேர்களும், 36 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பிலும் மெரிட்டில் தேர்வாகியுள்ளனர்!’’ என பூரிக்கிறார் கேரளா தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன். 1949ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேவசம் போர்டு 1,248 கோயில்களை நிர்வகிக்கிறது. தேர்வாகி பணி கிடைத்தாலும் தாழ்த்தப்பட்ட, ஈழவ வகுப்பு பூசாரிகளுக்கு கொலைமிரட்டல், தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது குறையவில்லை.