சுத்தத்திற்கு 5 மார்க்!பள்ளி மாணவர்களை தங்களது பரபர பப்ளிசிட்டிகளுக்கு அரசுகள் பயன்படுத்துவது இந்தியாவில் புது நியூஸ் அல்ல. தற்போது ஆந்திராவும் இதில் ரைட் லெக் எடுத்து வைத்துள்ளது. சீமாந்திரா அரசு, மாநிலத்திலுள்ள 9ம் வகுப்பிற்கு மேலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களையும் மத்திய அரசின் ஸ்வாச் பாரத் திட்டத்தில் பங்கேற்க வைக்க பிளான் செய்துள்ளது.

அதற்கு சலுகையாக 5 மார்க் ஆச்சரிய ஐடியா பிடித்தது வேறு யாருமல்ல... கிராம, பஞ்சாயத்துராஜ் மற்றும் ஐடி அமைச்சர் நர லோகேஷ்தான்! ‘‘மாணவர்கள் கழிவறை அற்ற வீடுகளைக் கண்டறிந்து அதனை உருவாக்க உதவுவார்கள்...’’ என்கிறார் இத்திட்ட இயக்குநரான முரளிதர் ரெட்டி. எஞ்ஜினியரிங் மாணவர்களின் மூலம் டாய்லெட் டிசைன் போடவும் பிளான் உண்டாம். 2019ம் ஆண்டுக்குள் 21 லட்சம் டாய்லெட்டுகளைக் கட்டுவதே சீமாந்திரா அரசின் தொலைநோக்குத் திட்டம்.