செம கிக்!- ரீடர்ஸ் வாய்ஸ்

பீர் ஏடிஎம்மின் அசத்தல் தகவல்கள் பீர் குடிக்காமலேயே செம்ம கிக் தந்தன.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; பூதலிங்கம், நாகர்கோவில்; அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மஞ்சள் மைனா அமலாவின் அழகு டாப் கியரில் எகிறுகிறதே!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை. போனஸோடு, லீவ் கொடுத்து துர்க்கா பூஜை! அசத்தல்

டீட்டெய்ல்ஸோடு பரவச பக்தி அனுபவம்.
- ப்ரீத்தி, செங்கல்பட்டு; த.சத்தியநாராயணன், சென்னை; சுகந்தி நாராயண், சென்னை.

அந்நிய நாட்டின் நிலம்தேடி விவசாயம் செய்யும் பஞ்சாப் சிங்கங்களின் ஸ்டோரி, பெருமை பிளஸ் பிரமிப்பு.
- சத்தியநாராயணன், சென்னை;

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பூதலிங்கம், நாகர்கோவில். ட்ரையல் ரூம் தொல்லைக்கு நல்ல வழி சொன்ன கட்டுரை நிம்மதி தந்தது.
- அக்‌ஷயா, திருவண்ணாமலை; ப்ரீத்தி, செங்கல்பட்டு.

ஏடாகூட படம் எடுக்க ரப்பாக கிளம்பியுள்ள சந்தோஷுக்கு மப்பு ஜாஸ்திதான்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

மோகன் காந்திராமனின் பேட்டி படுஜோர்.
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; சண்முகராஜ், சென்னை; மயிலை கோபி, அசோக்நகர்; வண்ணை கணேசன், சென்னை; ஜெரிக், சென்னை.

கான்ஃபிடன்டாக கூரியர் தொழிலையும் ஒரு கைபார்க்கும் பெண்களுக்கு ஆல் தி பெஸ்ட்.
- ஆனி ஏஞ்சலின், சென்னை; டி.எஸ்.சேகர், சென்னை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; சத்தியநாராயணன், சென்னை; சிம்மவாஹினி, வியாசர்பாடி. 

சட்ட ஆலோசனை தரும் நமதி அமைப்பு பற்றிய தகவல்களும், தம் சூழலைக் காக்க ஒன்றுதிரண்ட மக்களின் போராட்டமும் நாம் கற்கவேண்டியவை.
- சைமன்தேவா, விநாயகபுரம்.

யுவகிருஷ்ணாவின் காட்ஃபாதர் தொடர், அரஸின் ஓவியங்களோடு ஆரவார மிரட்டல்.
- நவீன்சுந்தர், திருச்சி.

உ.பியில் கிளையண்டை வக்கீல் வெளுக்கும் காட்சி, சினிமாவையும் மிஞ்சிவிட்டது. இந்தியாவை அவமானப்படுத்திய செங்கோட்டை பிக்பாக்கெட்டை ஜெயிலில் தள்ளுங்கள் சார்! ஆசிட்டால் லைஃப் அழிந்த பெண்களை வாழவைத்த ரியா சர்மாவுக்கு கங்கிராட்ஸ்.
- சைமன்தேவா, விநாயகபுரம்.