விண்வெளியில் வீரநடை!முன்பு வானத்திலுள்ள நட்சத்திரங்களையே ஆச்சரியமாகப் பார்த்த ஜெனரேஷனுக்கு இன்று விண்வெளியில் வல்லரசு நாடுகளின் தகத்தகாய விண்வெளி மைய பில்டிங் முயற்சிகள் பேரதிசயமாகவே இருக்கும். அதிலும் மிராக்கிள் சாதனையை ரஷ்யா சாதித்துள்ளது. விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை வல்லரசு நாடுகள் கைகோர்த்து அமைத்து வருகின்றன.

அதில் ரஷ்யாவின் விண்வெளி வீரர்களான செர்ஜி ரியாஸான்ஸ்கி, ஃபெடோர் யுர்ச்சிகின் இருவரும் விண்வெளியில் நானோ சாட்டிலைட்டை நிறுவ வீரநடை நடந்த 360 டிகிரி வீடியோவை வெளியிட்டுள்ளனர். விண்வெளியில் வீரர்கள் வாக்கிங் சென்ற முதல் 360 டிகிரி வீடியோ என்பதால் உலகெங்கும் செம ஹாட் வைரலாகிவிட்டது. ஆகஸ்ட் மாதம் பதிவான 3 நிமிட வீடியோவை இதுவரை 2 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்

தொகுப்பு: ரோனி