WHOவுக்கு இந்திய தலைவர்!



இந்திய மெடிக்கல் கவுன்சில் செயலாளரான டாக்டர் சௌமியா சுவாமிநாதன், ஸ்விட்சர்லாந்திலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் புதிய திட்டத் தலைவராக (டெபுடி) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நிறுவனங்களில் இது இரண்டாவது உயர்ந்த பதவி. குழந்தைகள் மருத்துவராக முப்பது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய சௌமியா, சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் கூட.

‘‘எங்களது தேர்வுக்குழு சுகாதார நிறுவனம் செயல்படும் 14 நாடுகளிலும் ஆய்வு செய்து டாக்டர் சௌமியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது...’’ என்கிறார் WHO வின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அட்ஹானோம். டாக்டர் சௌமியா, பசுமைப் புரட்சியைச் செயல்படுத்திய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.