பஜனை புக் கிஃப்ட்!



- ரோனி

முகத்தையும், புத்தகத்தின் அட்டையையும் பார்த்து மனிதரை முடிவு செய்வது எவ்வளவு சீரியஸாக்கும் என்பதற்கு அமெரிக்க பாட்டியின் கிஃப்ட் நிகழ்வே லைவ் சாட்சி. அமெரிக்காவாசியான டிஃபானியின் அம்மா, தன் ஆறு வயது பேத்திக்கு சூப்பர் குழந்தைகள் புத்தகத்தை பரிசளிக்க ஆசைப்பட்டார். ‘If Animals Could Talk,’ என்ற அட்டைப்படத் தலைப்பை பார்த்ததும் உடனே செலக்ட் செய்து கிஃப்ட் பேப்பரை சுற்றி பேத்திக்கு பரிசளித்துவிட்டார்.

பின்னொரு நாளில் டிஃபானியின் மகள் புத்தகத்தை பிரித்து சாவகாசமாக சத்தம் போட்டு படிக்க, ஏகத்துக்கும் அடல்ட்ஸ் ஒன்லி சொற்கள்! அப்போதுதான் அது பஜனை புத்தகம் என தெரிந்து பாப்பாவின் வாயை மூடி ஷாக் ஆகியிருக்கிறார் சிறுமியின் டாடி. இந்நிகழ்வை டிஃபானி இணையத்தில் பதிவிட, பஜனை புத்தக கிஃப்டை கொடுத்த பாட்டியை நினைத்து அகில உலகமே குலுங்கிக் குலுங்கி சிரித்து வருகிறது.