ஆஸ்திரேலியா கட்டில்!இன்று நாம் கர்லான் மெத்தையில் கரடுமுரடாகப் படுத்துப் புரண்டாலும் முந்தைய ஜெனரேஷன் பயன்படுத்திய பொருட்கள் ஆல்வேஸ் கிளாசிக்தானே! அதையேதான் இணையத்தில் வைரலாகியுள்ள ஆஸ்திரேலிய விளம்பரமும் நினைவுபடுத்தியுள்ளது. ட்விட்டரில் மின்னல் வேக வைரலிலுள்ளது, ஆஸ்திரேலியாவின் ‘மேட் இன் ஆஸ்திரேலியா’ கட்டில் விளம்பரம்தான்.

நாம் இங்கு காலங்காலமாகப் பயன்படுத்திய கற்றாலை நார், நூலில் செய்வார்களே... அதே கட்டில்தான். டிரெடிஷனல் இந்தியர்களுடையது என்ற பெயரில் மார்க்கெட்டிலுள்ள இக்கட்டில் நீளம், அகலம் எல்லாம் கஸ்டமரின் விருப்பத்திற்கேற்ப செய்து தரப்படும் என உலா வரும் விளம்பரத்தில் கிறுகிறுப்பு தருவது கட்டிலின் விலைதான். ஜஸ்ட் ரூ.50 ஆயிரம்! 

- ரோனி