ஏபி வைத்த ஆப்பு!மும்பையைச் சேர்ந்த தனியால் கானுக்கு, என்ஐடியிலிருந்து அட்மிஷன் லெட்டர் வந்தது. பெற்றோர், நண்பர்கள் என அனைவருக்கும் சூப்பர் குஷி. சரி, பையனை ஜாலி ரோடு ட்ரிப் மூலம் சந்தோஷப்படுத்தி அனுப்பி வைப்போம் என மகாராஷ்டிரா முழுக்க சுற்றி, தெலுங்கானா வந்து ஆந்திராவில் உள்ள என்ஐடியில் அட்மிஷன் லெட்டர் நீட்டினால் -சேர்த்துக்கொள்ளவில்லை. என்னாச்சு?

ரோடு ட்ரிப் ஜாலியெல்லாம் ஓகே. ஆனால், அட்மிஷன் லெட்டரில் NIT A.P என்பதை ஆந்திரா என்று தனியால்கான் ஃபேமிலி புரிந்துகொண்டதுதான் சோகம். ஏபி என்றால் ஆந்திரப்பிரதேசம்தான் வருமா? அருணாச்சலப் பிரதேசம் கூட ஏபிதான்! அங்கிருக்கும் என்ஐடியிலிருந்து அட்மிஷன் லெட்டர் வந்துள்ளது. ஆந்திராவுக்கு ஜாலி ட்ரிப் என ராங்ரூட்டில் தனியால்கான் கடந்து வந்த தூரம் அதிகமில்லை. வெறும் 930 கி.மீ.தான்! காலேஜ்ல சேர்ந்துட்டீங்களா தல?