வடஇந்திய துரைசிங்கம்!- தொகுப்பு: ரோனி

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் சிதோரா கிராம பள்ளி அது. பள்ளி அருகே வெடிகுண்டு ஒன்று தட்டுப்பட, உடனே 100க்கு போன் வந்துவிட்டது. உடனே கிளம்பி வந்த போலீஸ் படையிலிருந்த ஹெட் கான்ஸ்டபிள் அபிஷேக் படேல், என்ன செய்தார் தெரியுமா? வெடிகுண்டை குழந்தைபோல தூக்கி தோளில் வைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். எங்கே? அதை டிஸ்போஸ் செய்ய வேண்டுமே... அதற்குத்தான் அந்த 1 கி.மீ தடதட ஓட்டம்.

‘‘400 குழந்தைகள் படிக்கும் பள்ளி அது. குடியிருப்பும் அருகிலிருந்தன. எனவே, வெடிகுண்டை அப்புறப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே என் மனதிலிருந்தது...’’ என்கிறார் ஹெட் கான்ஸ்டபிள். அருகில்தான் ராணுவப்பயிற்சித் தளம் உள்ளது. எனவே அங்கிருந்து தவறுதலாக வெடிகுண்டு கிராமத்தின் பள்ளி அருகே விழுந்திருக்கலாம் என தகவல் சொல்கிறார் ஐஜி சாகர் சதீஷ் சக்சேனா.