கேரட்டில் என்கேஜ்மெண்ட் மோதிரம்!



தலையில் சீப்பு, காதில் பேனா, மூக்கில் கண்ணாடி இதையெல்லாம் எங்கு வைத்தோம் என்று தெரியாமல் வீடு எங்கும் தேடுவது உலக ட்ரெண்ட். கனடா லேடி இந்த லிஸ்ட்டில் மோதிரத்தையும் இணைத்துள்ளார்! கனடாவைச் சேர்ந்த மேரி கிராம், தன் பண்ணை நிலத்தில் கேரட்டுகளை உற்சாகமாக விதைக்கும்போது தன் என்கேஜ்மெண்ட் மோதிரம் நழுவியதை கவனிக்கவில்லை.

வீட்டுக்கு வந்தபின் கையில் ஏதோ குறைவதாகத் தோன்ற, ஐயோ என அலறியபடி பார்த்தால் மோதிரத்தை காணோம்! கணவர் நார்மனிடம் எப்படியோ மழுப்பி சமாளித்துவிட்டார். ஆனாலும் குற்றவுணர்வு தீரவில்லை. இப்போது அவரது மருமகள் தோட்டத்தில் கேரட்டை அறுவடை செய்யும்போது, கேரட்டிலிருந்து மோதிரத்தை மீட்டு மேரியிடம் தந்துவிட்டார். மேரியின் கணவர் நார்மன் இறந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படியானால் மோதிரம் தொலைந்து எவ்வளவு நாட்கள் ஆச்சு? 13 ஆண்டுகள்!