COFFEE TABLE- குங்குமம் டீம்

கலாட்டா

ஜாலியாக கலாட்டா செய்து மற்றவர்களை அசத்துவது வெளிநாடுகளில் சகஜமான ஒன்று. அப்படி ஒரு ஃபன் கலாட்டாவைப் பற்றிய வீடியோ இது. கடற்கரை ஒன்றில் ஒரு கூட்டம் குளுகுளு காஸ்ட்யூம்களில் சன் பாத் எடுத்துக்கொண்டிருக்கிறது.

அங்கே சூரிய குளியல் எடுப்பதற்காக தரைவிரிப்புடன் வருகிறாள் ஒரு அல்ட்ரா மாடர்ன் டூபீஸ் பொண்ணு. அங்கே அவள் பண்ணும் அட்டகாச அலம்பல்களை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘Ha ha ha funny’ பக்கத்தில் பதிவிட 30 லட்சம் பார்வையாளர்கள், நான்கு லட்சம் பகிர்வுகள் என அந்த வீடியோவை வைரலாக்கிவிட்டனர்.

டாட்டூ

‘‘You will always be my hero’’ என அப்பாவைக் கொண்டாடும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒரு அப்பா பொண்ணு ப்ரியங்கா சோப்ரா. அவரது அப்பா பக்தியை பாலிவுட்டே அறியும்.

அவரது நினைவாக தன் வலது கையில் வாட்ச் கட்டும் இடத்தில் ‘Daddy’s lil girl’ என டாட்டூவே குத்தியிருக்கிறார். சமீபத்தில் அவரது அப்பாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய ப்ரியங்கா, ‘‘We miss you dad. Happy birthday. You will always be my hero. Always celebrated’’ என ஃபீலாகியிருக்கிறார்.

OMR OMG 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் புதுமையாக தோஷி ஹவுசிங் என்ற தனியார் நிறுவனம் ஒரு பேருந்தின் வழியே ஓ.எம்.ஆரின் வரலாற்றைச் சொல்கிறது. அடையாறு, மத்திய கைலாஷில் இருந்து தொடங்கும் இந்த பஸ் டிரிப் டைடல் பார்க், பெருங்குடி வழியாக சோழிங்கநல்லூரில் முடியும்.

OMR OMG Express எனப்படும் இந்த ஏ.சி. பஸ்சில் யார் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். தவிர, வழிநெடுகிலும் வரலாற்று அறிஞர் ஸ்ரீராமின் குரலில் ஒலிக்கும் ஓ.எம்.ஆரின் வரலாற்றைக் கேட்டு ரசிக்கலாம். ஒரு மாதத்திற்கு இந்த இலவச பஸ் பயணம் என்கிறது இந்நிறுவனம்!

ஆல்பம்!

ரிக்கெட்டுக்கு ஐபிஎல் எப்படியோ அதுபோல கால்பந்துக்கு பிரீமியர் லீக் போட்டிகள். இந்தப் போட்டிகளில் பங்குபெறும் அணிகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக லண்டனைச் சேர்ந்த ஆர்செனல் ஃபுட்பால் கிளப் அணிக்கு அந்நாட்டைவிட கேரளாவில் ரசிகர்கள் அதிகம்.

ஆர்செனல் அணிக்கு இந்தியாவிலிருந்து தனது வாழ்த்துகளையும், ஆதரவையும் தெரிவிக்கும் விதமாக ராப் பாடகர் சித்தார்த்த் ‘Indian Gooner’ என்ற பாடலை உருவாக்கியிருக்கிறார்.

கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலை யூடியூப்பில் வெளியிட, சில நிமிடங்களிலேயே இரண்டு லட்சம் பேர் பார்த்து வைரலாக்கிவிட்டனர். ஆர்செனல் அணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தப் பாடலின் யூடியூப் லிங்க்கை ஷேர் செய்ததுதான் ஹைலைட்!

மருந்து

ரவில் நன்றாகத் தூங்கும் முதியவர்களுக்கு மறதி நோயே வராது என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்காக அறுபது வயதைக் கடந்த ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் மறதி நோயால் பல தொல்லைகளுக்கு ஆளானவர்கள்.

எந்த மருந்தும், மாத்திரையும் இந்த நோயில் இருந்து அவர்களை விடுவிக்கவில்லை. மருத்துவர்கள் அவர்களை ஒரு மாதத்துக்கு எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளாமல் நன்றாகத் தூங்கச் சொல்லியுள்ளனர். நிம்மதியான தூக்கத்தால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக முதியவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கின்றனர்.