ரயிலை மக்கள்!



வண்டி ஸ்டார்ட் ஆகவில்லையா? நாசாவையே மிரட்டும் டெக்னிக்குகளில் வண்டியை புரட்டி எடுப்பது, பஸ்களை மாட்டுவண்டி போல தள்ளுவது என்பதெல்லாம் நம் ஊரில் தினசரி வார்ம் அப் பயிற்சிகள். ஆனால், சீனாவிலும் அப்படிதான் என ஆச்சரியப்படுத்துகிறது வைரல் வீடியோ ஒன்று. பெய்ஜிங்கிலுள்ள டாங்ஷிமென் ரயில்வே ஸ்டேஷனில்தான் நடந்தது அந்த அதிர்ச்சி சம்பவம்.

இரவு எட்டுமணிக்கு ஸ்டேஷனில் ரயில் ஏறவந்த ஒருவர் திடீரென கால்வழுக்கி, ட்ரெயினுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையேயுள்ள கேப்பில் எக்கு தப்பாக மாட்டிக் கொண்டார். பெண்கள் வாய்மேல் கைவைத்து அலறியதில், எஞ்சின் ட்ரைவரும் எமர்ஜென்சி ப்ரேக் அழுத்தினார். பயனில்லை. மாட்டியவரை இம்மி அளவுகூட நகர்த்த முடியவில்லை. அப்புறம் என்ன... கபாலீசுவரர் தேரை ஊரே கூடி இழுப்பது போல, ஒரு கைபோடுங்க பாஸ் என அத்தனை பயணிகளையும் சங்கிலியாய் கட்டி ட்ரெயினை லைட்டாக தள்ளி பொறியில் எலிபோல மாட்டியவரை காப்பாற்றி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்!