ஹைதராபாத்தில் ட்ராஃபிக் ராமசாமி!



சென்னையில் போலீசாரை அலறவைக்கும் ட்ராஃபிக் ராமசாமி, தெலுங்கு தேசத்திற்கு ஷிப்ட் ஆகவில்லைதான். ஆனால், அங்குள்ள ஒருவரும், ட்ராஃபிக் ராமசாமியைப் போலவே அதிரடி வழிகளில் போலீசாரை நூதனமாக பெண்டை கழற்றி வருகிறார்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த Majlis Bachao Tehreek (MBT) என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த அம்ஜெத் உல்லா கானுக்கு போலீஸ் மேல் பல நாட்களாக கடுப்பு.

பீக் அவரில் நடுரோட்டில் பைக், ஆட்டோக்களிடம் சலான் நீட்டி பைசா வசூலில் இறங்குவது, ட்ராஃபிக்கை கண்டு கொள்ளாமல் சிக்னல் லைட்டில் விளையாடுவது, வேடிக்கை பார்ப்பது என ஆல்ரெடி நொந்தவரை ஹெல்மெட்தான் சேஃப் என்று போலீசார் அட்வைஸ் பண்ணியதும் பொங்கிவிட்டார்.

ஹைதராபாத்தின் பைபாஸ், ஹைவே, முட்டுச்சந்து ஆகிய இடங்களில் போலீசார் ஹெல்மெட் போடாமல் ஒன் வே ரூட்டில் ஒய்யாரமாக போனதை படம் பிடித்தார். ட்விட்டரில் கண்ணியமாய் பதிவிட்டு டிஜிபியின் கணக்கோடு கடமை தவறாது இணைத்தார். அவ்வளவேதான். மக்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாக, மாட்டிக்கொண்ட போலீசாருக்கு திருடனை ஸ்கார்பியன் கடித்தது போல திகைத்து நிற்கின்றனர்.