நியூஸ் வே



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

‘காதல் மன்னன்’ மானுவின் பார்வை இப்போது சீரியஸ் படங்களின் பக்கம் திரும்பிவிட்டது. சிங்கப்பூரின் முதல் தமிழ்ப்படமான ‘சிங்கையில் குருஷேத்ரம்’ படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட முக்கிய பங்காற்றியவர், இப்போது இலங்கை சென்றிருக்கிறார், ஒரு குறும்பட இயக்கத்துக்காக! பெரிய படத்திலும் நடிக்கக்கேட்டு ‘மனு’ போடலாமா மானுகிட்ட..?

‘சந்திரமுகி’ படத்தில் வேட்டையன் கேரக்டரில் ஒரு குறுந்தாடியோடு வருவாரே... அப்படி ஒரு தாடியை நிஜமாகவே வளர்த்துவருகிறார் சூப்பர் ஸ்டார். உலகக்கோப்பையை இந்தியா வென்ற ஃபைனல் மேட்ச்சை இந்த கெட்டப்போடுதான் பார்த்து ரசித்தார் ரஜினி. இப்போது அவரை சந்திப்பவர்கள், தாடியைப் பார்த்து புருவம் உயர்த்தி காரணம் கேட்டால், சிரிப்பை மட்டுமே பதிலாகத் தருகிறார். ஒருவேளை ‘ரானா’வில் வரப் போகும் ராஜா கேரக்டருக்கான தயாரிப்போ!

கடந்த 17 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் 10 லட்சம் பேருக்கு இலவச வினா&விடை புத்தகத்தை வழங்கிவரும் சி.எஸ்.சி கம்ப்யூட்டர் எஜுகேஷன் நிறுவனம், இந்த ஆண்டு 3 லட்சம் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சியை வழங்குகிறது. ஆயிரம் பயிற்சியாளர்களை வைத்து தமிழகம் முழுக்க தரப்படும் இந்தப் பயிற்சி, முற்றிலும் இலவசம்!