யப்பா! யப்பா!



Untitled Document



வாழும்போதும் மறைவுக்குப் பின்னும் நம் உள்ளங்களில் 'மகாத்மா'வாக இருப்பவரை பப்ளிசிட்டிக்காக வம்பிழுக்கும் ஜோசப் லிலிவேல்ட் போன்றவர்கள் தற்காலிகமாக வெற்றி பெற்றுவிடலாம், மனசாட்சியை மறந்துவிட்டால்!
- ஸ்ரீதேவிராஜன், திருவிடைமருதூர்.


உமக்கு ரொம்பத்தான் நாங்க செல்லம் கொடுத்துட்டோம். இல்லேன்னா, சூப்பர் ஸ்டாரின் தத்துவக் கதை, கமலின் கவிதை என்றெல்லாம் போட்டுவிட்டு 'அது... ச்சும்மா ஏப்ரல்&1க்கு ஏமாற்றுவதற்காக' என்று கலாய்ப்பீர்களா?!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.


 
வாய்பேச முடியாதவர்களுக்கு செயற்கைக்குரல் தரும் கருவி மனித சமுதாயத்துக்குப் பெரிதும் உதவும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை தமிழன் தருவது நம்மை தலைநிமிரச் செய்கிறது.
 
- துரை சுப்ரமணியன், திருச்சி.


அழிந்து வரும் தமிழர் இசைக் கருவிகளின் பயன்பாடு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அவை அழியும் நிலையில் உள்ளதை நினைத்தாலோ மனம் வாடுகிறது.
- ப.அண்ணாமலை, திண்டுக்கல்.


ஐரோப்பியர் அல்லாத முதல் பாதிரியார் நம்மவர் என்ற செய்தி, தமிழன் எந்த சூழலிலும் தலைநிமிர்ந்து வாழத் தெரிந்தவன் என உணர்த்தியது.
- அ.யாழினி பர்வதம், சென்னை-7.


தேர்தல் காமெடி(கள்) அடேங்கப்பா! சுயேச்சை வேட்பாளர்கள் வீட்டுமனை, தங்கத் தாலி, நானோ கார் வழங்கப்படுமென்று அறிவித்துள்ள வாக்குறுதிகளைப் படித்து யப்பா... சிரிப்பு தாங்கலை யப்பா!
 
- எஸ்.கோமதி வெங்கட், தஞ்சாவூர்.


'டைட்டானிக்' மூலம் அனைவர் இதயத்திலும் நுழைந்து ஆட்டம் போட்ட நாயகி கேட் வின்ஸ்லெட். இன்று ஆட்டிசம் குழந்தைகளுக்காகப் பாடுபடுவது அவர் பேருள்ளம் கொண்டவர்னு காட்டுது.
- சுகந்தா ராம், சென்னை&59்.


Q&A பலவித சந்தேகங்களைப் போக்கிவரும் பயனுள்ள பகுதி. முட்டை பற்றி பலருக்கும் இருந்த பலத்த சந்தேகம் அகன்றது. நன்றி!
- வ.பத்மா, ஸ்ரீரங்கம்.


முயற்சித்தால் இவ்வுலகில் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு சாலமன் பாப்பையாவின் வாழ்க்கை எடுத்துக்காட்டு!
 
- பிரேமா ராஜ்குமார், பெங்களூரு-16.


சிலர் ஞானத்தைப் பேசுவது போதனைக்குத்தான்... பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லை என்பதை 'கலாஷ்நிகோவ்' நெஞ்சில் தைப்பது போல பிரதிபலிக்கிறது.
 
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.


'சுட்ட கதை சுடாத நீதியில்'  தவறே செய்யாதவர்கள் எப்போதாவது அறியாமல் தவறு செய்யும்போது பெரிதாகப் பார்க்கப்படும் என்பது உண்மையே!
- எம்.சம்பத்குமார், ஈரோடு-11்.


'சிறை எனப்படுவது' புதுமை. பாலியல் சித்திரவதை செய்தமைக்காக ஒரு குற்றவாளிக்கு 14,400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது விந்தை தகவல்.
 
-பழனி, சேலம்-3.