கலகல கானா கேங்... பலபல பைலா சாங்கே!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

யூத் மனசின் பல்ஸ் படிக்கத் தெரிஞ்சவன் ‘லைட்டா’ பைத்தியம் புடிச்சவனாத்தான் இருக்கணும். இளமைன்றதே இன்னோசென்ட் கிறுக்குதானோ? இவங்க அடிக்கற கூத்திருக்கே... ஆத்தாடி!

 நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பக்கத்துல மகேந்திரபுரின்னு ஒரு ஏரியா. அங்கதான் நம்ம இளமைப் பட்டாளம் வெளுத்து வாங்கும் மஹேந்திரா எஞ்சினியரிங் கல்லூரி. கொளுத்தும் வெயிலில் ஜில்லுனு மோர் குடிச்சிட்டு ஜிலு ஜிலு ஏசியில் விழுந்தது போல ஒரு சூழல். ‘‘இப்போ கல்லூரியையே கலக்கினாலும் கொஞ்ச நேரம் பள்ளிக்குச் சென்று திரும்புகிறோமே’’ என்று கெஞ்சின பொறியியல் பொய்பேசிகள். (பீலா வுடற பொண்ணுங்கள வேற எப்படி கூப்டுறதாம்!)

‘‘எங்களுக்கு டைம்பாசே அரட்டைதான். சைக்கிள் கேப்பில் ஃபிளைட்டே ஓட்டுற அளவுக்கு சிலபல கலைகள் கைவசம் இருக்கு. குண்டூசி விழுந்தாக்கூட கேட்கும் கிளாஸ் ரூம்ல ஒரு குட்டி பேப்பர்ல எழுதப்படற அந்த ஜாலி மெசேஜ் எல்லார் கையிலும் எந்தக் கட்டணமும் இல்லாம பாசாகும். கையில் செல்போன் இல்லாத குறைக்கு வேறென்ன செய்ய?’’ என்று நொந்து தொடங்கினர்.

கணிப்பொறி படிக்கும் தீபிகா ரொம்ப ஜாலி டைப். இந்த லொடலொட பார்ட்டிதான் எல்லோருக்கும் என்டர்டெய்னர்... ‘‘இவ மண்டைல எப்ப கொட்டினாலும், கொட்டோ கொட்டுன்னு ஜோக்குகள் விழும்’’ என்று பிடித்துக்கொண்டு ஆளாளுக்கு கொட்ட வர, வடிவேலு ஸ்டைலில் தீபிகா சிணுங்க, எல்லாரும் சிரிக்கத் தயாரானார்கள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineதீபி பொண்ணு சொன்னது இதான்... ‘‘என்னதான் பசங்க 160 சிசி அப்பாச்சி, 220 சிசி பல்சர், 225 சிசி கரிஷ்மா, 165 சிசி ஸ்ப்ளெண்டர் பிளஸ்னு பைக் வாங்கினாலும் அது என்னவோ 80 சிசி ஸ்கூட்டிக்கு பின்னாடிதான் போகும்’’ என பந்தா பறக்க, தீபியிடம் இருந்து ஜோக் வெடிகள் கிளம்பின.

‘‘நீங்க ரொம்ப உஷார் பார்ட்டியா?’’

‘‘அப்படித்தான்னு நினைக்கிறோம்.’’

‘‘அப்படின்னா தினமும் காலைல பிரஷ் பண்ற பழக்கமெல்லாம் இருக்கோ?’’

‘‘ம்’’

‘‘அப்போ பிரஷ் பண்ணி முடிக்கிற அந்த மூணு நிமிஷம் எந்த உஷார் பார்ட்டியா இருந்தாலும் இளிச்சவாயன்தான்! ஹே... ஹே... ஹே!’’

இப்படி நமக்கே ஜோக்கிரி குத்து விட்டது இந்த போக்கிரிப் பொண்ணு.

எந்த விஷயத்தையும் பக்குனு பத்திக்கிற நெருப்புக்கு இன்னொரு பெயர்தான் குஷ்புகுமாரி. பீகார் பொண்ணு. படிப்பு, நடிப்பு, கலாட்டா எதற்கும் மொழி ஒரு பிரச்னையே இல்லை. கேம்பஸ்ல குஷ்புகுமாரின்னா தெரியாத ஆளே இருக்க முடியாது. அவ்ளோ வாலு. இந்த இம்சை அரசி ஒரு முறை ரயிலில் தனது ஹை ஹீல்ஸை தொலைத்துத் தேடிப் பிடித்த கதை அச்சச்சோ காமெடியாம்!

அவங்க சொன்னதில என்ன காமெடின்னு நாலு நாள் ரூம் போட்டு யோசிச்சாலும் புரியாது. அதனால சொல்லலே... விடுங்க!

குஷ் விடவில்லை...

‘‘பாட்டி மொழிக்கு பேத்தி சொல்றா இப்படி...

குரைக்கும் நாய் கடிக்காது -பேசுற ஃபிகர் எல்லாம் பிக்கப் ஆகாது.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல - ஜீன்ஸ் போட்டவ எல்லாம் ஹைகிளாஸ் ஃபிகர் இல்ல.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் - சூப்பர் பொண்ணு திரும்பிப் பார்த்தா அப்பவே உஷார் பண்ணிரு.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது - படிச்சிருக்கிற ஃபிகருக்கு எல்லாம் சமைக்கத் தெரியாது

அடிப்பாவிகளா... பழமொழிய இப்படியா வறுத்தெடுப்பாங்க? எந்தப் பாட்டி காதுலயாவது விழுந்து தொலைச்சிடப் போவுது. குஷ் அப்புறம் புஸ்..!

அம்மணிகள் ஆன் டியூட்டியில் அரட்டை அடித்ததில் லேட்டாகிவிட, ‘கட்’ அடித்த மேம் கிளாசில் இருந்து தப்பிக்க யோசித்ததில், அடைக்கலம் கொடுத்தது பாத்ரூம். நரகத்தில் 20 நிமிஷம் பதுங்கியிருந்த பச்சைக்கிளிகளை அடுத்த கிளாஸ் மேடம் யதேச்சையாகக் கண்டுபிடித்து செம டோஸ்!

‘‘லைஃப்ல கட் அடிச்சு பாத்ரூம்ல பதுங்கற எங்க நெலமை யாருக்கும் வரக்கூடாதுப்பா’’ என சலசலத்தார்கள். விட்டா ஃபீலிங்லயே அழ வெச்சிருவாங்களோ..!

ஐஸ்வர்யா பார்க்க ஒல்லி கானா. ஸ்லிம் ரகசியம் என்னவாம்?

‘‘அம்மா வயத்துக்குள்ள இருக்கும்போது அடிச்ச ஸ்விம்தான் அந்த ஸ்லிம் ரகசியம்’’ என மொக்கை போட்டது ஐஸ்.

‘‘அப்போ திமிங்கலம் எப்பவும் ஸ்விம் பண்ணிட்டுதானே இருக்கு... அப்புறம் ஏன் ஸ்லிம் ஆகலை’’ என்று ஐஸை கடலில் தள்ளியது கவுரி!

பீகாரைச் சேர்ந்த ஏஸ்மிஸ் ரொம்ப ஸ்பீடான ஆளு. படிப்பு, சாப்பாடு என எதிலும் ஃபர்ஸ்ட். கிளாஸ்லேயே பாடத்தை மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கும் ரகம். பொண்ணுக்கு அஞ்சு மொழிகள் தெரியும். எந்த ஃபிரெண்டையும் தைரியமாக, தாறுமாறாகத் திட்டும் ஒரே செல்லமாம்!

‘‘எப்ப எந்த மொழியில் பேசுவாள்னே தெரியாது. எனக்கு ஒரு வரம் கெடச்சா இவ குரல்வளை கிட்ட ஒரு துப்பாக்கிய வெச்சு அத்தனை மொழியையும் சுட்டுப் பொசுக்கணும்’’ என குறிபார்த்தன டெர்ரர் பேபிகள்.

அன்ஸ் மரியா மேத்யூ  ‘பேரைச் சொல்லும்போதே ஏதோ ஒரு டியூனை கம்போஸ் பண்ற மாதிரியிருக்கே’ எனக் கேட்டால் வந்தது பதில்.

‘‘இது கேரளாவில் இருந்து வந்திருக்கும் அறிவுப் பொண்ணு. படிப்பு, லூட்டி இரண்டிலும் சென்டம் வாங்குமாம்...’’

அன்ஸ் சொன்ன ஜோக்ஸ்...

‘‘பாகிஸ்தான் அணியோட கேப்டன் கடவுள்கிட்ட வேண்டினார் இப்படி... ‘நான் இந்தியாவ வெல்ல நீதான் ஹெல்ப் பண்ணணும்.’

அதுக்கு கடவுள் சொன்னாராம் இப்படி... ‘என்ன துரதிர்ஷ்டம்... நான்தான் இந்தியாவோட ஓபனிங் பேட்ஸ்மேன்!

ஏன்னா, சச்சின்தான் கிரிக்கெட் கடவுள். எப்பூடி?!’’ என்றது அன்ஸ்.

‘அப்படி இப்படி’ என்று அவரை அலேக்காக தூக்கியது பட்டாளம்.

இந்த ரகளைகளுக்கு மத்தியில் குட்டி குட்டி கேம்ஸ் பண்ணலாமே என எல்லா குயில்களும் வரிசைகட்டி ரயிலாகக் ‘கூ..........’வின. விட்ட குறை தொட்ட குறையாக கண்ணாமூச்சி, கொலை கொலையா முந்திரிக்கா, ராட்டினம் என ரிலாக்ஸ் பண்ணிக்கொண்ட தேவதைகள் ஒரே ஒரு சபதம் சொல்லி வழியனுப்பின.

‘‘எங்களை சமத்துப் பொண்ணுங்கன்னு சர்ட்டிபிகேட் கொடுக்காம ‘குண்டக்க மண்டக்க’ கமென்ட் அடிச்சவங்க கனவில், சத்தியமா வடிவேலு ஜீன்ஸ் பேண்ட் சகிதம் ரஜினி கெட்டப்ல வந்து கிளிமாஞ்சாரோ பாட்டுக்கு டான்ஸ் கட்டுவார்!’’  
 ஸ்ரீதேவி
படங்கள்: சங்கர்