நியூஸ் வே



 
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



அன்னா சாப்மேனை நினைவிருக்கிறதா? அமெரிக்காவில் கையும் களவுமாகப் பிடிபட்ட ரஷ்ய உளவுப்பெண். அதன்பின் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இந்த அழகி இப்போது மாடலிங் உலகில் பிஸி. ஆனாலும் கையில் துப்பாக்கியைக் கொடுத்துத்தான் ‘கேட்வாக்’ போகச் சொல்கிறார்கள்.






 Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழில் நடிக்க வந்திருக்கும் பாலிவுட் பியூட்டி பிராச்சி தேசாய்க்கு சம்பளம் என கோடியைத் தாண்டிய ஒரு தொகையைச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் இந்தி டி.வி. தொடர்களில் நடித்துவந்த அம்மணி, பாலிவுட்டில் ஹிட்டானதும் டி.வி&யை மறந்துவிட்டார். தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க ஆசை என்று கேட்டால், ‘‘நான் பேராசைக்காரி. எல்லா ஹீரோக்களுடனும் ஜோடி சேர ஆசை!’’ என்கிறார்.



 
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


ராம்கோபால் வர்மாவோடு நான்கு ஆண்டுகளாக ஹீரோயினாக இணைந்திருந்த நிஷா கோத்தாரி இப்போது அவருடன் இல்லை. வர்மாவின் ஆறு படங்களில் ஹீரோயினாக நடித்தும், இரண்டு பேருக்குமே வெற்றி தேவதையின் ஆசி கிடைக்கவில்லை என்பதுதான் பிரிவுக்குக் காரணமாம்!