ஆச்சரியப் பொருட்கள்... அதிரடிப் பரிசுகள்!



சன் குழுமத்தின் சூப்பர் பெண்கள் இதழ் ‘குங்குமம் தோழி’ மற்றும் மை கிளீன் ஹோம் பைசன் புராடக்ட்ஸ் இணைந்து நடத்திய ‘தோழி சூப்பர் எக்ஸ்போ’ நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை டிரேட் சென்டரில் மே 6, 7, 8 தேதிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் விருந்தினராக ‘நாதஸ்வரம்’, ‘குலதெய்வம்’ சூப்பர்ஹிட் டிவி தொடர்களின் நாயகி ஸ்ரித்திகா சிறப்பித்தார். ஜுவாரி ஃபர்னிச்சர், ஜிங்கா டயாமேட்டிக் மற்றும் ஜிங்கா கோல்டு, ஜிபிஆர் கிளினிக் கருத்தரிப்பு மையம் ஆகிய நிறுவனங்கள் கோ-ஸ்பான்ஸர்களாக பங்கு பெற்றன.

‘அடேயப்பா’ என மலைக்க வைத்துவிட்டனர் கடல் போல திரண்டு வந்த மக்கள். சூப்பர் எக்ஸ்போவில் அழகுசாதனப் பொருட்கள், ஆடைகள், குழந்தைகள் பராமரிப்பு அயிட்டங்கள், அணிகலன்கள் உள்பட பலவிதமான பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைத்திருந்தன.

குழந்தைகள் ஆர்வமாகப் படிக்கிற கதைப்புத்தகங்கள், சித்திரக் கதைகள், விளையாட்டு பொம்மைகள் என குட்டீஸை ஈர்க்கும் கடைகளும் இருந்தன. பெரியவர்களுக்கான மசாஜ் காலணிகள், முதுகு வலிக்கான பேக் சப்போர்ட்டர் போன்ற பொருட்களும், ஆர்கானிக் அங்காடியில் இயற்கை பூச்சி விரட்டி, காபி ஃபில்டர் போன்றவையும், குதிரைவாலி, தினை அரிசி போன்ற குடும்பத்துக்குத் தேவையான விதவிதமான பொருட்களும் கிடைத்தன.

‘தோழி’யோடு இந்நிகழ்வை இணைந்து நடத்திய ‘மை க்ளீனிங் புராடக்ட்ஸ்’ நிர்வாக இயக்குனர் ஜேசுதாஸ், ‘‘பைசன் குருப்பின் ஓர் அங்கமான ‘மை கிளீனிங் புராடக்ட்ஸ்’ நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், இல்லத்தரசிகளுக்குப் பயன் தரும் க்ளீனிங் பெருட்களை வழங்கி வருகிறது’’ என்றார்.

ஜுவாரி ஃபர்னிச்சர் தமிழ்நாடு கிளை மேலாளர் ஹரிபாஸ்கர், ‘‘15 ஆண்டுகளாக மேஜை, நாற்காலி போன்றவற்றை Ready to Assemble அடிப்படையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்து வருகிறோம். நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்டு, தரமான ஃபர்னிச்சர் வகைகளை ஹோம் பேக்கேஜ் ஆஃபரிலும் வழங்குகிறோம்’’ என்றார்.

‘‘ஜிங்கா கோல்டு மருந்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்ய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இளமைத் தோற்றம் கிடைக்கும். மூலிகைகளால் தயாரிக்கப்படுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை.

எங்களுடைய மற்றொரு தயாரிப்புதான் ஜிங்கா டயாமேட்டிக். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் இந்த மாத்திரை விற்பனைக்கு வந்த சில மாதங்களிலேயே மக்களின் நம்பிக்கையையும் வரவேற்பையும் பெற்று சர்க்கரை நோயாளிகளின் நண்பனாகவே திகழ்கிறது’’ என்றார் ஜிங்கா பிராண்ட் நிறுவனர் மற்றும் சேர்மன் ஐ.எம்.ஹனிஃப்.

‘‘ஜிபிஆர் கிளினிக் மற்றும் கருத்தரிப்பு மையம், சென்னை முகப்பேரில் 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பத்தாவது சிறந்த கருத்தரிப்பு மையமாகவும், தென்இந்தியாவில் நான்காவது சிறந்த கருத்தரிப்பு மையமாகவும் எங்கள் மையத்தை ஒரு பிரபல ஆங்கில நாளிதழ் தேர்ந்தெடுத்திருக்கிறது” என்றார் டாக்டர் புவனேஸ்வரி.

அன்னையர் தினத்தை முன்னிட்டு குழந்தையின்மை சிகிச்சைக்காக 3 பெண்களை தினகரன் குழும நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் குலுக்கல் முறையில் தேர்வு செய்தார்.  ஜிபிஆர் கிளினிக் மற்றும் கருத்தரிப்பு மையத்தின் சார்பாக முதல் பரிசு ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம்,  மூன்றாம் பரிசு ரூ.30 ஆயிரம் பெறுமான தொகைக்கு IVF சோதனைக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது.

பார்வையாளர் உள்ளே நுழையம்போதே மில்கா வொண்டர் கேக் வழங்கி அசத்தினர். கேள்வி நேரத்தில் சரியாகப் பதிலளித்தோருக்கு டாக்டர் பத்ராஸ், ஈஐடி பாரி அம்ரிட் சுகர் மற்றும் பைசன் புராடக்ட்ஸ் ஆகியவற்றின் கிஃப்ட் ஹேம்பர்கள் கொடுத்து இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.

மொத்தத்தில் இது சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் தந்த எக்ஸ்போ!

- உஷா, விஜயகுமார்
படங்கள்: ஆர்.கோபால், கணேஷ்குமார்