ஜோக்ஸ்



‘‘நம்ம கட்சி முக்கிய நிர்வாகிகளை எல்லாம் தேர்தல்ல நிக்க வைச்சுட்டு நீங்க மட்டும் ஏன் தலைவரே ஒதுங்கிட்டீங்க?’’
‘‘அவங்க தோற்கறதையே என்னால தாங்கிக்க முடியாதுய்யா!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

 ‘‘ரெண்டு தொகுதியில நின்னும் தோற்றுப் போயிட்டீங்களே..?’’
‘‘தப்பு பண்ணிட்டேன்... ரெண்டு தொகுதியிலும் ஒரே கட்சியில நிக்காம, வேற வேற கட்சியில நின்னு இருக்கணும்!’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தலைவர்தான் தேர்தல்ல நிற்கிறார்ல... அப்புறம் ஏன் ‘இந்த முறையாவது நில்லுங்க’ன்னு அவர்கிட்ட கெஞ்சுறாங்க?’’
‘‘அவங்க கெஞ்சுறது, மேடையில் விழாம நிற்கச் சொல்லி!’’
- கி.ரவிக்குமார், நெய்வேலி.

‘‘தொண்டர்கள் ஏன்யா கோபப்படறாங்க?’’
‘‘அவங்க செருப்பு வீசினா, உங்களுக்கு மட்டுமில்லாம மனைவி, மகளுக்கும் சேர்த்து கேட்கறீங்களாமே..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘தலைவர் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கிடையாதுன்னு சொல்லிட்டாங்களாமே... ஏன்?’’
‘‘ஒரு ஆளுக்கெல்லாம் பாதுகாப்பு தேவையில்லேன்னு நினைச்சிருப்பாங்க...’’
- அசோகன், சென்னை-19.

ஸ்பீக்கரு...

‘‘கூட்டணிக்காக கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து கொசுக்கடியால் டெங்கு வந்து
கஷ்டப்படும் தலைவர்
அவர்களே!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

ஸ்பீக்கரு...

‘‘எங்கள் தலைவரை பேச
விடாமல் செய்வதற்காக மேடைக்கு எதிரே அவருடைய மனைவியின் படத்தைக் காட்டச் சொல்லி இக்
கூட்டத்தில் ஆட்களை ஏற்பாடு செய்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவரை வன்மையாகக் கண்டித்து...’’
- வ.முருகன், விழுப்புரம்.