நியூஸ் வே
ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். தனது அக்கா மகன் ஜி.விக்காக இப்போதே இரண்டு பாடல்களைப் போட்டுக் கொடுத்துவிட்டார் ரஹ்மான்.
 திரை நட்சத்திரங்கள் போலவே அரசியல்வாதிகளும் டயட் கடைப்பிடித்து உடல் எடையைக் குறைக்கும் காலம் இது. அதிக உடல் பருமனோடு இருக்கிறார் என விமர்சிக்கப்பட்ட மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கடந்த 3 மாதங்களில் 18 கிலோ எடை குறைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை இந்தியா முழுக்க ஒரு கொண்டாட்டமாக்க திட்டமிட்டிருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த ஆண்டு இதற்கு ரூ.32 கோடியை மத்திய அரசு செலவிட்டது. இம்முறை பட்ஜெட் கொஞ்சம் பெரிது. தனியார் நிறுவனங்களையும் இணைப்பது, டிசைனர் டிரஸ் என அமர்க்களம் காட்டப் போகிறது யோகா.
 மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு பைலட் கேரக்டராம். இதற்காக, விமானம் ஓட்டுதலுக்கான சில விஷயங்களில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி கமிட் ஆகியிருக்கிறார்.
அட்லிக்கு இன்னும் ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்து, தயாரிப்பாளரையும் சொல்லிவிட்டார் விஜய். ஸ்கிரிப்டில் மூழ்கிவிட்டார் அட்லி.
எக்கச்சக்கமாக உடல் எடையை அதிகரித்து ஆர்யா நடிக்கும் படத்திற்கு ‘கடம்பன்’ எனப் பெயர் வைக்க பரிசீலிக்கிறார்கள்.
‘‘கேள்வி கேட்பவர்களை மோடிக்குப் பிடிக்காது. நான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பதாலேயே என்னை அவர் வெறுக்கிறார்’’ என்கிறார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார்.
‘‘நான் நடிகையான பிறகு என்னிடம் யாரும் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. நான் யார்கிட்டயும் அவ்வளவு சுலபமாகப் பழகாததுதான் காரணம்னு நெனைக்கறேன்!’’ என சமீபத்தில் ஃபீல் ஆகியிருக்கிறார் திவ்யா.
சிம்பு நல்லது செய்தால் கூட பிரச்னையாகிவிடுகிறது. ‘போடுங்கடா ஓட்டு’ என ஒருமையில் அன்பாக அழைக்கப் போக, ‘பாடலில் மரியாதைக் குறைவான வரிகள் இருக்கின்றன’ எனப் புகார் பெரிதாகக் கிளம்பியிருக்கிறது.
மகேஷ்பாபுவின் ‘பிரமோத்சவம்’ படத்தில் காஜலுக்கும், ப்ரணிதாவிற்கும் உள்ள காம்பினேஷன் சீன்கள் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
மாநில சட்டமன்றங்களில் இதுவரை டெக்னாலஜி வாயிலான உரைகள், விவாதங்கள் அனுமதிக்கப்பட்டதில்லை. வரலாற்றில் முதல்முறையாக தெலங்கானா சட்டமன்றத்தில், மாநில நீர்ப்பாசனம் தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ், ஒரு பவர் பாயின்ட் பிரசன்டேஷன் தருவதற்கு அனுமதி அளித்திருக்கிறார் சபாநாயகர்.
‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘முத்துராமலிங்கம்’ எனப் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
மீண்டும் இசை ஆல்பத்தில் கவனம் செலுத்துகிறார் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் லண்டன் சென்ற ஸ்ருதி, அங்கே இருக்கும் ‘டைனோசர் பைல்-அப்’ என்ற இசைக்குழுவுடன் கூட்டணி அமைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார். பெண்களின் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த ஆல்பத்தை அடுத்த ஆண்டு மகளிர் தினத்தில் வெளியிட திட்டமாம்.
சிம்புவின் மனப்போக்கையே அவரது அடுத்த படத்தின் தலைப்பாகவைத்துவிட்டார்கள், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’!
த்ரிஷாவின் பிறந்த நாளுக்காக ட்விட்டரில் ‘மை டார்லிங் குஞ்சுமணி’ எனக் கொஞ்சியிருக்கிறார் ஆர்யா. இதுதான் இப்போது மற்ற ஹீரோக்கள் பேசிக்கொள்கிற டாபிக்.
‘மருது’ படத்தின் கடைசி நாள் ஷூட்டிங் பாடல் ஷூட்டுடன் நிறைவடைந்தது. அன்று விஷால், திவ்யாவுடன் சூரிக்கும் காம்பினேஷன் உண்டு என்பதால் படப்பிடிப்பிற்கு தன் மகன்களையும் அழைத்துச் சென்றுவிட்டார் சூரி. பசங்களுக்கு சம்மர் ட்ரிப், அப்பாவுக்கு ஷூட்டிங்..! அடடா!
அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்கு கதை எழுதிய கனிகா தில்லான், ‘தி டான்ஸ் ஆஃப் துர்கா’ என்ற பெயரில் நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். கனிகாவின் நெருங்கிய தோழியாகிவிட்ட அனுஷ்கா, இப்போது அதில் பாதி புத்தகத்தை படித்து முடித்துவிட்டாராம்.
‘டைட்டிலிலேயே ஜாதியை சேர்த்திருக்கிறாரே கமல்..!’ என ‘சபாஷ் நாயுடு’வைப் பற்றிய பேச்சு கோலிவுட்டில் இன்னும் அடங்கவில்லை. ‘தசாவதாரம்’ பல்ராம் நாயுடுவாக வரும் கமல், இந்திப் பதிப்பில் ‘பிரணாப் குண்டு’ என்ற பெங்காலி கேரக்டரில் நடிக்கிறார்.
|