அட்டகாசம்!
இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ் நிச்சயம் நமக்குப் பெருமிதம்தான். வல்லரசு என்கிற மரியாதை இதுபோன்ற சில சாதனைகளால்தான் ஏற்படுகிறது. இதற்காக 1410 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பது தகுந்ததே! - கே.டி.கனியமுதன், கோவை.
 சினிமா தயாரிப்பில் நுழையும் நடிகர்கள் குறித்த கட்டுரை செம போல்ட் அண்ட் நீட்! - பி.ஜி.சந்தோஷ், சென்னை-32
சம்மருக்கு ஏற்ற கூலிங் கிளாஸில் விஷாலும், திவ்யாவும் அட்டையில் அட்டகாசம்! ஆனாலும் திவ்யாவின் அந்தச் சிரிப்பு ஹாட்தாங்க! - டி.தனபால், ஈரோடு.
சென்னையில் கார், பைக் பழுது பார்க்க ஒரு ஆப்... அசரடித்தது. 300 மெக்கானிக்குகளை ஒருங்கிணைத்து நம் மொபைல் போனுக்குள் கொண்டு வந்திருப்பது பலே! இப்படி தமிழ்நாடு முழுக்க இணைத்துச் செய்யலாமே! - எஸ்.டி.அருள்ரோஸ், தூத்துக்குடி.
‘துன்பத்திற்கான அடிப்படையை மாற்றாமல் மக்களைச் சிரிக்க மட்டும் சொல்லக் கூடாது!’ என்ற விவேக்கின் வார்த்தைகள் சிந்திக்க வைத்தன! - த.குறிஞ்சிராஜன், புதுச்சேரி.
ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளிகளின் தன்னம்பிக்கை ப்ளஸ் உழைப்பிற்கு லட்சம் பொக்கே பரிசாகக் கொடுக்கலாம்! - பி.சியாமளா ரமேஷ், சென்னை-78
நா.முத்துக்குமாரின் பால்யகால வளர்ப்புப் பிராணிகள் குறித்த வாஞ்சை எழுத்து, காலத்தின் ரீவைண்ட் சக்கரமாகச் சுழன்றது! - ஜே.கண்ணபிரான், தஞ்சை.
மிடில் கிளாஸ் மக்களின் மறதியை குறை கூறாமல், அரசு நிறைவேற்றாத வாக்குறுதிகளை நினைவுபடுத்தியதற்கு பிடியுங்கள் ஒரு சபாஷ்! - ப.தி.கோகுல்வேந்தன், மதுரை.
‘முகங்களின் தேசம்’ பயனுள்ள பயணத் தொடராக இனிக்கிறது. ‘பெரும்பாலான பயண விபத்துகள் திரும்பி வரும்போது நிகழ்பவை’ என்பது அருமையான அவதானிப்பு! - கே.சாமிதுரை, வேலூர்.
‘டவுன்லோடு மனசு’ தொடர் அருமை. ‘வார்த்தை பொய் சொல்லும்... பிம்பம் பொய் சொல்லாது’ என்ற மருதுவின் பேச்சில் யதார்த்தம் நிரம்பி வழிந்தது! - ஜி.சண்முகவேல், திருப்பூர்.
‘வீழ்த்த வேண்டிய சர்வாதிகாரம்’ என ஈக்வடோரியல் கினியா நாட்டு அதிபர் பற்றி வந்த கட்டுரையைப் படித்தபோது உறைத்தது... அதில் இருக்கும் ஒவ்வொரு வரியும் நம் ஊர் தேர்தலுக்கும் பொருந்தும் என்பது! - கே.சார்லி, கன்னியாகுமரி.
|