ஜோக்ஸ்
‘‘வரும் தேர்தலில் ஜெயித்து ‘சிம்ரன்’ வைத்த காரில் செல்வேன் என்பதை...’’ ‘‘நாசமா போச்சு... ‘சைரன்’ வைத்த காரில்னு சொல்லுங்க தலைவரே!’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
 ஸ்பீக்கரு...
‘‘பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை ஜெயிக்க வைத்து, சட்டசபையில் பெஞ்ச்சை தட்ட எனக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டு...’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘சீக்கிரமா பேசி முடிங்க தலைவரே...’’ ‘‘ஏன்யா?’’ ‘‘போதை இறங்கிடுச்சுன்னா தொண்டர்கள் கைதட்ட மாட்டாங்க!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘ஒவ்வொரு வாக்காளருக்கும் பணம் கொடுக்கிறதுக்கு முன்னால தலைவர் எதுக்கு வானத்தை அண்ணாந்து பார்க்கிறாரு..?’’ ‘‘பறக்கும் படை வருதான்னு செக் பண்ணிக்கிறாராம்..!’’ - கே.லட்சுமணன், திருநெல்வேலி.
ஸ்பீக்கரு...
‘‘தேர்தலுக்குப் பிறகு தலைவரைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆகவே, அவரை இறுதியாகப் பார்க்க விரும்புவோர் பொதுக் கூட்டத்திற்கு வரும்படி...’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘ஹலோ, கற்பகா ஹாஸ்பிடலா... சார், நான் சொல்ற அட்ரஸுக்கு ஆம்புலன்ஸை அனுப்பி வைங்க!’’ ‘‘ஸாரி சார்! ஆம்புலன்ஸ் எல்லாம் பணம் பட்டுவாடா செய்யப் போயிருக்கு...’’ - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘ஓட்டுக்கு பணம் குடுத்துட்டு தலைவர் என்ன புலம்பறார்..?’’ ‘‘முன்னாடி வீடு வீடா புகுந்து பணத்தை எடுத்தவர், வீடு வீடா போய் கொடுக்கும்படி ஆகிட்டுதேன்னுதான்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
|