மகுடமாகத் திகழ்ந்தது!



மாணவர் பக்தி ஸ்பெஷல் அட்டைப்படம் பேரருள் வழங்கியது. பொறுப்பாசிரியரின் கட்டுரை எல்லோர் மனதையும் உண்மை சாவி போட்டுத் திறந்தது. அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனின் காவியம் படிக்கப் படிக்க வியப்பு. தெளிவு பெறுஓம் ஒவ்வொரு கேள்விக்கும் சந்தேகப்பட முடியாத பதில் அளிக்கிறது. ஆன்மிகம் பலன் புத்தகத்தை அப்படியே பாதுகாக்கிறேன்.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.



திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வரும் என் போன்ற பலருக்கு சித்ரா மூர்த்தியின் அருணகிரி உலா தொடரில் வெளியாகியிருந்த ‘‘திகைக்க வைக்கும் திருநீறிட்டான் மதில்’’ என்ற கட்டுரை, அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மதில் சுவரின் பின்னணியில் உள்ள ஆன்மிக ரகசியங்களை, ஆச்சரியப்படும் வகையில் உணர்த்தியிருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இறையருளால் இலக்கியம் இயற்றியவர்கள் என்ற கட்டுரையில் நம்பியாண்டார் நம்பி, குமரகுருபரர், காளிதாசன் ஆகிய இலக்கிய மகான்களை வெளியிட்டது பள்ளிகள் திறக்கும் இந்நேரத்தில் மாணவர்கள் தெரிந்து வணங்க வேண்டிய தகவலாக இருந்தது.
- கே.சிவகுமார், சீர்காழி.

இறையருளால் கல்வி ஞானம் பெற்று காலத்தால் அழிக்கமுடியாத இலக்கிய மகான்களாய்த் திகழ்ந்து தெய்வத் தமிழ் மொழிக்கு மாண்பு சேர்த்த சான்றோர்களின் சாதனைகளைப் பற்றிய தொகுப்பு பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. சனி அமாவாசையன்று சந்தோஷம் அருளும் சனிபகவான் கோயில் கொண்டுள்ள ‘கோகுல்தாம்’ என்ற திருத்தலத்தின் சிறப்பை அறிந்து வியந்தேன். மதுரா செல்ல நேர்ந்தால் நிச்சயம் இந்த
திருத்தலம் செல்ல தீர்மானித்திருக்கிறேன்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

திருமுல்லைவாயில் முல்லைவனநாதர், திருஆனைக்கா ஜம்புகேஸ்வரர், திருப்பாலைத்துறை ஈசனார், வேமுலவாடா ஹரிஹர க்ஷேத்திரம்,
கல்விக்கு மேன்மை தரும் செட்டிப்புண்ணியம், உத்தமர்கோயில், உத்தரப்பிரதேசத்து சனி பகவான் கோயில் என ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து முழு விவரங்களுடன் தந்திருந்தது மாணவர் பக்தி ஸ்பெஷலுக்கு வைரங்கள் பதித்த மகுடமாகத் திகழ்ந்தது.
- சுகந்தி நாராயணன், சென்னை.

மோசமான செயலால் விபரீத விளைவுகள் விளையும். மோசமான எண்ணத்தால் மனம் பாழ்பட்டு விடும். இதனை அருமையாக
விளக்கியுள்ளார் திருப்பூர் கிருஷ்ணன்.
- கே.ஏ.நமச்சிவாயம், பெங்களூரு.

திருமுறைக்கதைகள் அருமை. பஞ்சாங்கக் குறிப்புகள் பயனுள்ளதாய் இருக்கின்றன. நன்றிகள் பல.
- ஹம்ஸா, ஓசூர்.

பக்தித் தமிழ் தொடரில் படங்கள் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல் உள்ளது. கரீம் நகரில் இந்து ஆலயத்தில் உள்ள முஸ்லிம் தர்க்கா கட்டுரையைப் படித்து நெகிழ்ந்தேன். உங்களுக்கு ஒரு நமஸ்தே, சலாம்!
- இந்துஜா, கடலூர்.

பகவத்கீதையும், திருமந்திரமும் தெவிட்டாத தேனமுது. மறுபடியும் மறுபடியும் படிக்க
வேண்டிய பொக்கிஷங்கள். பாராட்டுகள்.
- ராமச்சந்திரன், அரூர்.

மாதராசிபலன் துல்லியமாக உள்ளது. பள்ளிகள் திறக்கும் இந்நேரத்தில் பரிமுகப் பெருமானின் அற்புத மந்திரங்களை வெளியிட்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்து விட்டீர்கள்.
- ரேணுகா ஜெயராம், திருச்செங்கோடு.