தனம் தரும், நிம்மதி தரும், அருள் தரும் திருப்பதிகங்கள்!



அபூர்வ ஸ்லோகம்

வாழ்க்கைக்குத் தேவையான தனம் குறைவன்றிக் கிடைக்க ஓத வேண்டிய திருப்பதிகம். திருவாவடுதுறை திருத்தலத்தில் அருளும் இறைவன் மாசிலாமணீஸ்வரரையும், அம்பாள் ஒப்பிலா முலையம்மையையும் போற்றி திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட மூன்றாம் திருமுறையின் 4வது திருப்பதிகம் இது.



இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே.
இதுவோ எமை ஆளுமா றீவதொன் றெமக்கல்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன்கழல் விடுவேன் அல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல்எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன் றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
தும்மலொ டருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதில் எரிஎழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன் றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
கையது வீழினும் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன்
றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எநதாய் உன்னடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவு கொண்டரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே.
இதுவோ எமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய அப்படி
அழலெழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமா றீவதொன்
றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும் சீருடைக் கழல்அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணிமுடி ராவணனை ஆரிடர்
படவரை அடர்த்தவனே
இதுவோ எனமி ஆளுமா றீவதொன்
றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
உண்ணினும் பசிப்பினிம் உறங்கினும்
நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
க்ண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே.
இதுவோ எனமி ஆளுமா றீவதொன் றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் னடியலால் அரற்றாதென்னாப்
புத்தரும் சமணரும் புறன் உரைக்கப் பத்தர்கட்கருள் செய்து பயின்றவனே.
இதுவோ எனமி ஆளுமா றீவதொன்
றெமக் கில்லையேல்
அதுவோவுன் தின்னருள் ஆவடுதுறை அரனே.
அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த இலைநுனை வேற்படை யெம் இறையை
நலமிகு ஞான சம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலமிசை
நிலையிலரே.
திருச்சிற்றம்பலம்.

கடன் முழுமையாக தீரவும், பொருளாதார நிலை மேம்படவும் ஓதவேண்டிய திருப்பதிகம். இது மதுரையம்பதியில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் சொக்கநாதரையும், அம்பாள் மீனாட்சியையும் போற்றி திருஞானசம்பந்தரால் அருளப்பட்ட மூன்றாம் திருமுறையின் 108வது திருப்பதிகமாகும்.

வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக்கத் திருவுள்ளமே
பாதி மாதுட னாயபரமனே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
வைதிகத்தின்  வழியொழு காதவக்
கைத வம்முடைக் காரமண் தேரரை
எய்து வாது செயத் திருவுள்ளமே
மறியு லாங்கையின் மாமழு வாளனே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத்திருவுள்ளமே
முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அந்த ணாளர் புரியு மருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
வெந்த நீற தணியும் விகிர்தனே
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
வேட்டு வேள்விசெ யும் பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஒட்டி வாது செயத் திருவுள்ளமே
காட்டி லானை யுரித்தவெங் கள்வனே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அழலதோம்பு மருமறையோர்திறம்
விழலதென்னு மருகர் திறத்திறம்
கழலவாது செயத் திருவுள்ளமே
தழலிலங்கு திருவுருச் சைவனே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா அமணரைத்
தேற்றி வாது செ யத்திரு வுள்ளமே
ஆற்ற வாள ரக்கற்கு மருளினாய்
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
நீல மேனியம் மணர் திறத்து நின்
சீலம் வது செயத் திரு வுள்ளமே
மாலு நான்முக னுங்காண் பரியதோர்
கோல மேனிய தாகிய குன்றமே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
அன்று முப்புரஞ் செற்ற வழகநின்
துன்று பொற்கழல் பேணா வருகரைத்
தென்ற வாது செ யத்திருவுள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே.
ஞால நின் புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே.
கூடலாலவாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி யமணரை வாட்டிட
மாடக் காழிச்சம் பந்தன் மதித்தவிப்
பாடல் வல்லவர் பாக்கிய வாளரே,
திருச்சிற்றம்பலம்.