மேன்மைக்கு வழிகாட்டும் பாகுவா வாஸ்து விஞ்ஞானம்



வளம் தரும் வாஸ்து

‘ச்சீ’ சக்தியை நிலைப்படுத்தும் வழிமுறைகளை இப்போது காண்போம்“ச்சீ” சக்தி பிரவாகம் எடுக்குமானால், அதனால் ஆரோக்யம், அதிஷ்டம், வளமை ஆகியவை கூடும். “ச்சீ” சக்தியை அதன் இயற்கையான வழியில் வழிந்தோட செய்ய வேண்டும்.

“ச்சீ” சக்தியை வழிமறிக்கவும், குழப்பத்தில் ஆழ்த்தவும், விரைவுபடுத்தவும் அல்லது நிலை நிறுத்தவும் பல காரண காரியங்கள் உள்ளன. ஒரு வேளை “ச்சீ” சக்தி தவறாக வெளியேறுமானால் அதை தடுக்க பல பரிகார உபாயங்கள் உள்ளன. இவ்வாறு செய்வதால் “ச்சீ” சக்தியை நிலை பெறச் செய்ய முடியும்.

‘பாகுவா’வின்படி மனையை, வீட்டை, தொழிற்சாலையை சரிபடுத்துவதன் மூலம் சுத்தம், நிலைப்படுத்துதல், மேம்பாடு ஆகியவற்றை நுகர முடியும்.குறியீடுகளை பயன்படுத்துவதின் மூலம் ‘‘ச்சீ” சக்தி அமிர்தமாக வழிந்தோடும் என பாகுவா குறிப்பிடுகிறது. பாகுவாவை8 அங்கங்களாக பிரித்தோம்.

அதற்கான பரிகார முறைகளை குறியீடு மூலம் நிவர்த்திக்க முடியும். எப்படி திரிசூலம் என்றவுடன் சிவன் சாந்நித்யம் ஞாபகத்திற்கு வருகிறதோ, திருமண் இட்டவுடன் பெருமாள் நினைவு வருகிறதோ அப்படி குறியீடுகளை அவ்விடத்தில் இடம் பெறச் செய்வதின் மூலம் தக்க சூழ்நிலை வந்து சேரும்.

தீபம்-ஒளிகண்ணாடியை பரிகாரமாக வைப்பதால் கெட்ட சக்திகள் விலகி, நற்சக்தி பெருகும். மெழுகுவர்த்திகள் குளிர்ச்சியான ‘‘ச்சீ’’சக்தியை சூடாக்கி நற்பலன்களை வாரி வழங்கும். புகழ் பெறவும், வாழ்க்கை வளமைக்கும் ஒளி/தீப குறியீடுகளை பாகுவா முறைப்படி பயன்படுத்தலாம்.

 கோயில்களில் ஏற்றப்பட்டிருக்கும் தீபத்தை வணங்கும்போது நற்சக்தி நம்முள் நுழைகிறது. அதையே பெங்சூயி ‘ஒளி’ என்று விளிக்கிறது. பாகுவாவின் எண் ‘1’ஐ இதன்படி வலுப்படுத்த முடியும்.

இரட்டை உருவங்கள்இரண்டு இரண்டாக உள்ளவை எல்லாம் இரட்டை உருவங்களாக கருதப்படும். இரண்டு ஜாடிகளில் பூங்கொத்து, பறக்கும் இரட்டை பறவைகள், இரட்டை குழந்தைகள் (ஜெமினி), இரட்டை கரடிகள் ஆகியவற்றை பயன்படுத்தி பாகுவாவின் 2ம் எண் பகுதி மூலம் ‘‘ச்சீ’’ சக்தியை பெற டியும்.வர்ணங்கள்வர்ணங்களை சுவரில் பூசும் முறை மூலம் ‘‘ச்சீ’’ சக்தியை கூடுதலாக வரவழைக்க முடியும். தெளிவாக பளிச்சென்ற வர்ணங்கள் ‘‘ச்சீ’’ சக்தியை எளிதில் கவரும். கறுப்பு, இளம் நிறங்கள் ‘‘ச்சீ’’ சக்தியை கவர்ந்திழுக்க இயலாமல் தீய சக்திகளை வரவழைக்கும்.

பாகுவா எண் 7க்கான பரிகாரமாக வர்ணங்களை மட்டுமே எடுத்துக் கொள்ளமுடியும். வர்ணங்கள் நம் குழந்தைகளின் வளர்ச்சி, எதிர்காலம், புகழ், படிப்பு, மேன்மை, குழந்தைகளால் நற்பெயர், பார் புகழும் வாரிசுகள் ஆகியவற்றை வர்ணங்கள் கட்டுப்படுத்துகின்றன.எனவே மேற்காணும் இனங்களில் குறைபாடுகள் எனில் வர்ணங்கள் மூலம் குறைபாட்டை சரி செய்து பரிகாரம் அடைய முடியும்.ஒலி ஒலி மூலம் நம் வாழ்வில் வசந்தம் வீச செய்ய முடியும்.

சிம் என்ற காற்றில் அசைந்தாடும், ஒலி எழுப்பும் குழல்கள், மணி, ரேடியோ, இதம் தரும் இசை, ஒலி எழுப்பும் கடிகாரம் ஆகியவற்றை இவற்றுக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். கடிகாரம் வைப்பதாக இருப்பின் சரியான நேரம் காட்டும் கடிகாரமாக இருக்க வேண்டும்.ஒலி பாகுவாவின் “6” எண் பகுதியை மேம்படுத்தும். புதிய முயற்சி, கண்டுபிடிப்பு, சாதனை, வெற்றி, பொது மக்கள் ஊழியம், தர்ம சிந்தனை போன்ற இனங்களை வெற்றி கொள்ள
6ம் எண்ணுக்குரிய இடத்தில் ஒலிப்பதின் மூலம் கைவரப்பெறும்.

இதை வைத்துதான் கோயில்களில் ஜபம், மந்திர பிராத்தனை ஆகியவற்றை நடத்தி தெய்வ சாந்நித்யம் அடைய செய்கின்றனர்.அசைந்தாடும் பொருட்கள்காற்றில் அசைந்தாடும் கொடி, நீர் வீழ்ச்சி, நீர் ஊற்று, ஊதுபத்தியின் வாசனைப்புகை, கடிகாரம் ஆகியவற்றை அசைந்தாடும் பொருள்களாகக் கொள்ள முடியும். இன்றும் பல கடைகளில் நிறைய காணக்கிடைக்கின்றன. நீரில் ஆடும் பந்து, தீபம் அசைந்தாடுவது போன்றவற்றையும் இதற்கென எடுத்துக் கொள்ளலாம்.இது பாகுவாவின் எண் 1 பகுதியை சமநிலைப்படுத்தும் பொருட்களாகும்.

இவற்றை நம் அபிமானம், கூட்டமைப்பு, வியாபாரம், தொழில், வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் இனங்களாக கொள்ளலாம்.முதன்மை மதிப்பெண் பெறுபவர்கள், சிகரம் ஏறி சாதனை படைப்பவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியவர்களை உருவாக்குவது பாகுவாவின் 1ம் எண் பகுதியே.

இதனை மிகச்சிறந்த ஸ்தானமாக மாற்ற, அசைந்தாடும் எப்பொருளையும் இங்கு நிறுவி மேற்காணும் சிறப்பான அமைப்பைப் பெறலாம்.

நிலைபெறும் பொருட்கள்ஒரு இடத்தில் நிலையாக எவ்வித சலனமும் இன்றி இருப்பது நிலைபெறும் பொருட்களாகும்.சிலையாகவும், இரத்தின கற்களாகவும், கனமான வெற்றி முரசு ஆகியவற்றின் மூலம் பாகுவா எண் 8ன் இருப்பிடத்தை கனகச்சிதமாக நமக்கு ஏற்றபடி ‘‘ச்சீ” சக்தி மிக்கவையாக மாற்ற முடியும்.படிக்கும் இடம், ஆராய்ச்சி மையம், அலுவலக பிரதான இடம், காசு சேமிக்கும் இடம், புத்தக அலமாரி ஆகியவை மூலம் அமைதி, பொழுதுபோக்கு அம்சம் ஆகியவற்றை அடைய மேற்காணும் நிலை பெறும் பொருட்களை நிர்மாணிக்கலாம்.

அறிவு மேம்பாடு, விவாதிக்கும் தன்மை, சீர் தூக்கி பார்க்கும் பார்வை, அலசி ஆராய்தல் போன்றவற்றை அடைய இப்பகுதியில் மேற்காணும் அமைப்பை உடையவற்றை நிறுவி பலன்களை துல்லியமாக எதிர் நோக்கலாம்.செயல்படும் பொருட்கள்இவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளான டெலிவிஷன், எலக்ட்ரிக் டோஸ்டர், கணினி, செல்போன் போன்றவையும் அடங்கும். இவை மிகவும் அரிய பரிகாரம் செய்யும் கருவிகள் ஆதலால் இவற்றை கையாள்வதில் மிகவும் கவனம் தேவை. இவை பாகுவாவின் எண் 3 பகுதியினை சீர் செய்ய முடியும் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

இவை குடும்ப மேன்மை, தனி நபர் பெருமை பெண்/ஆண்/குழந்தைகளை உருவாக்கும் பகுதியாகவும், மெய்யறிவு, நுட்பமான அறிவு, வாழ்த்து பெறுபவர்கள், சாதனை செய்பவர்களுக்கு உரிய இடமாகவும் உள்ளதால், இங்கெல்லாம் மேற்காணும் கருவிகள் பழுதடையாமல் பயன்படுத்தவும், முறையாக செயல்
படுத்தவும் வேண்டும்.

அம்மி, ஆட்டுக்கல், கிரைண்டர், வாஷின் மெஷின் ஆகிய பொருட்களும் இதில் அடங்கும். குழந்தைகள் ரிமோட் கொண்டு விளையாடும் கார், மனித பொம்மைகள் இப்படி இன்னும் பல பொருட்களும் இதில் சேர்க்கலாம்.சைக்கிள், மோட்டார் சைக்கிள், நீர் இறைக்கும் மோட்டார் போன்றவற்றை பயன்படுத்தாமல் இப்பகுதியில் வைத்திருந்தால் மெய்யறிவு தடைபட்டு சாதனை வேதனையில் முடியும்.

(தொடரும்)