கண்ணனுக்குப் பரிசுகள்; நமக்கும் பரிசு!



பக்தித் தமிழ் 49

ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்றால், பார்க்க வருகிறவர்கள் விதவிதமான பரிசுகளை வாங்கி வருவார்கள். அதுபோல, குழந்தைக் கண்ணனையும் பார்ப்பதற்குப் பலர் வருகிறார்கள். சிறப்பான பரிசுகளை வாங்கிவருகிறார்கள். அவற்றை யசோதை அவனுக்குச் சொல்லித் தூங்க வைக்கிறாள்.இப்படியொரு காட்சியைக் கற்பனை செய்திருப்பவர் பெரியாழ்வார். ‘தாலேலோ’ என்று பாடி யசோதை கண்ணனிடம் இவற்றை விவரிப்பதாக அவர் எழுதியிருக்கும் பாடல்கள் அனைத்தும் அழகு நிறைந்தவை, பக்திச் சுவை ததும்புபவை.

முதலில், பிரம்மன் வருகிறார். அவர் என்ன பரிசு கொண்டு வருகிறார்?மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டிஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்மாணிக் குறளனே, தாலேலோ! வையம் அளந்தானே, தாலேலோ!சிறந்த தங்கத்தால் செய்த அழகான சிறிய தொட்டில்,

அதில் மாணிக்கமும் வைரமும் கோத்துக் கட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அருமையான இந்தத் தொட்டிலை, நீ தூங்குவதற்காகப் பிரம்மன் விருப்பத்தோடு தந்தார். வாமனனாக வந்த இறைவா, தாலேலோ! இந்த உலகத்தை அளந்தவனே, தாலேலோ!

அடுத்து வருகிறவர், காளையை வாகனமாகக் கொண்ட கபாலி ஈசன் (சிவபெருமான்). அவர் என்ன பரிசு கொண்டுவந்திருக்கிறார் தெரியுமா?உடை ஆர் கன மணியோடு ஒண் மாதுளம்பூஇடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடுவிடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான்,உடையாய் அழேல், அழேல், தாலேலோ! உலகம் அளந்தானே, தாலேலோ!கண்ணா, நீ இடுப்பில் அணிந்துகொள்வதற்கான அழகான சரிகை, அதில் ஆங்காங்கே தங்கமும் மணியும் கலந்து கோக்கப்பட்டிருக்கிறது, அதோடு மாதுளம்பூக் கோவை எனப்படும் அழகான ஆபரணம் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார் அந்தச் சிவபெருமான். ஆகவே, என் இறைவா, அழாதே, உலகத்தை அளந்தவனே,

தாலேலோ!அடுத்து, இந்திரன் வருகிறார். அவர் கொண்டுவந்துள்ள பரிசு என்ன?என் தம் பிரானார் எழில் திரு மார்வர்க்குசந்தம் அழகிய தாமரைத் தாளர்க்குஇந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணிதந்து உவனாய் நின்றான், தாலேலோ! தாமரைக் கண்ணனே, தாலேலோ!

என்னுடைய பிரான், அழகான திருமார்பைக் கொண்டவன், நிறத்தாலும் அழகாலும் சிறந்து விளங்கும் தாமரை போன்ற பாதங்களைக் கொண்டவன் இந்தக் கண்ணன். அவனைப் பார்க்க வருகிறார் இந்திரன். அழகான கிண்கிணி ஒன்றைக் கண்ணனிடம் தந்துவிட்டு, சற்றுத் தொலைவில் நிற்கிறார்! அப்படிப்பட்ட கண்ணனே, தாலேலோ, தாமரை போன்ற கண்களை உடையவனே, தாலேலோ!

தேவர்களின் அரசனாகிய இந்திரனைத் தொடர்ந்து, அழகிய வானத்தில் வாழும் தேவர்கள் எல்லாரும் வருகிறார்கள். அவர்கள் கொண்டுவரும் பரிசுகள் என்னென்ன தெரியுமா?சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,

செம் கண் கரு முகிலே, தாலேலோ! தேவகி சிங்கமே, தாலேலோ!சங்குகளில் சிறந்த வலம்புரி, கண்ணனின் சிவந்த கால்களுக்கு ஏற்ற கிண்கிணி, அழகான கைகளில் அணியப்படும் வளையல்கள், அரை நாண், அரை வடம்... சிவந்த கண்களைக் கொண்ட கருப்பான மேகமே, தாலேலோ! தேவகி பெற்றெடுத்த சிங்கமே, தாலேலோ!அடுத்து, குபேரன் வருகிறார். அவர் கொண்டுவந்திருக்கும் பரிசு என்ன?

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவைஎன்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான்,
 தாலேலோ! தூ மணிவண்ணனே, தாலேலோ!

சிறு குழந்தைகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாமல் இருப்பதற்காக, ஐந்து ஆயுதங்களை நகைபோலச் செய்து அவர்கள் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் உண்டு. இதற்கு
 ‘ஐம்படை’ என்று பெயர். எழிலான திருமார்பைக் கொண்ட கண்ணனுக்கு அந்த நகையை வழங்க நினைத்தார் கொடைவள்ளல் குபேரன். அழகான ஐம்படையும் முத்து மாலையும் செய்து கொண்டுவந்தார். கண்ணனை வணங்கி அவற்றைக் கொடுத்துவிட்டு, சற்றுத் தொலைவில் நிற்கிறார்! தூய்மையான மணியின் வண்ணத்தைக் கொண்ட என் இறைவா, தாலேலோ!

அடுத்து, வருணன் வருகிறார்!
ஓதக் கடலின் ஒளி முத்தின் ஆரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரி வளையும்
மா தக்க என்று வருணன் விடுதந்தான்,

சோதிச் சுடர்முடியாய், தாலேலோ! சுந்தரத் தோளனே, தாலேலோ!
அலைகள் நிறைந்த கடலில் கிடைத்த, ஒளி வீசுகின்ற முத்து

களைக் கோத்த மாலையும், சிறந்த பவளங்களால் செய்த மாலையும்,
 முன் கைகளில் அணிந்துகொள்வதற்கு ஏற்ற வளையல்களையும் வருணன் கொண்டு
வருகிறார்.

‘இவை அனைத்தும் இந்தப் பிள்ளைக்கு உகந்தவை’ என்று சொல்லி வணங்குகிறார்! ஒளி வீசும் கிரீடத்தை உடையவனே, தாலேலோ! அழகான தோள்களைக் கொண்டவனே, தாலேலோ!
அடுத்து, தேன் நிறைந்த தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் மகாலட்சுமி கொடுத்தனுப்பிய அன்புப் பரிசுகள் வருகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

கான் ஆர் நறும் துழாய் கை செய்த கண்ணியும்
வான் ஆர் செழும் சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்,
கோனே! அழேல், அழேல், தாலேலோ! குடந்தைக் கிடந்தானே, தாலேலோ!
காட்டில் வளர்ந்து நறுமணம் வீசும்

துளசியைத் தொடுத்த ’கண்ணி’ என்ற மாலை, வானில் வளரும் கற்பக மரத்தின் பூக்களைத் தொடுத்த ‘வாசிகை’ என்ற மாலை ஆகியவை மகாலட்சுமி தந்த பரிசுகள். எங்கள் தலைவா, அழாதே, அழாதே! குடந்தை நகரில் கோயில் கொண்டுள்ள இறைவா, தாலேலோ! அடுத்து, அச்சுதனாகிய எங்கள் கண்ணனுக்கென்று பூமாதேவி கொடுத்தனுப்பிய அன்புப் பரிசுகள் வருகின்றன. அவை
என்னென்ன தெரியுமா?

கச்சொடு பொற்சுரிகை காம்பு, கன வளை
உச்சி மணிச் சுட்டி, ஒண் தாள் நிரைப்
பொன் பூஅச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள்,

நச்சு முலை உண்டாய், தாலேலோ!
நாராயணா, அழேல், தாலேலோ!
ஆடையின்மேல் அணியும் கச்சு, தங்கத்தால் ஆன உடைவாள், தங்கத்தால் ஆன வளையல்கள், உச்சியில் சூடுகின்ற, மணிகள் பொருந்திய சுட்டி, அழகிய காம்புகளை உடைய வரிசையான தங்கப் பூக்கள்...

அரக்கியின் விஷ முலையை உண்டவனே,
தாலேலோ! நாராயணா, அழாதே,
தாலேலோ!கோபம் கொண்ட கலைமானை வாகன
மாகக்  கொண்ட  துர்க்கை அம்மன் அடுத்து
வருகிறாள். அவர் கண்ணனுக்குத் தரும்
பரிசுகள் என்னென்ன தெரியுமா?

மெய் திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும்  சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா, அழேல், அழேல், தாலேலோ! அரங்கத்து அணையானே, தாலேலோ!

உடலில் பூசுவதற்கான வாசனைப் பொடிகள், மஞ்சள், சிவந்த, பெரிய கண்களுக்கு அஞ்சனம், சிந்துரம்... இவற்றையெல்லாம் பார் ஐயா, அழாதே, தாலேலோ! அரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் இறைவனே, தாலேலோ!

இந்தப் பரிசுகள் அனைத்தையும்
விவரித்த பிறகு, நமக்கும் ஒரு
பரிசு உண்டு என்கிறார் பெரியாழ்வார்:
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப்
பட்டன் சொல்

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லைஇடர்தானே!
கண்ணனைக் கொல்லும் வஞ்ச
எண்ணத்துடன் ஓர் அரக்கி வந்தாள்.

அவளுடைய மார்பில் பால் குடிப்பதுபோல், அவளை வீழ்த்தினான் இந்த அஞ்சன
வண்ணன் (மை போன்ற நிறத்தை உடையவன்).

அப்படிப்பட்ட கண்ணனை, ஆய்ச்சி யசோதை தாலாட்டினாள், சிறப்பான சொற்களைச் சொல்லும் வேதவிற்பன்னர்கள் வாழும் வில்லிபுத்தூரைச் சேர்ந்த விஷ்ணுசித்தர் இவற்றைப் பாடிய அந்தப் பாடல்களைக் குறைவில்லாமல் சொல்ல வல்லவர்களுக்கு, எந்தத் துன்பமும் வராது! எல்லா இன்பங்களும் அவர்களுக்கு அந்தக் கண்ணனே அருள்வான்!

ஓவியங்கள்: வேதகணபதி
(தொடரும்)