முக்கண்ணன் கண்களில் நீர்



பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் ‘கல்லர்கார்’ என்ற இடத்தில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவபெருமான் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் மட்டும் இங்குள்ள சிவபெருமானின் ஒரு கண்ணில் இருந்து நீர் வழிகிறது. இதைக் காண்பதற்கு இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்துவிடுவார்கள்.

வேதம் கேட்கும் விநாயகர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்டியூருக்கு அருகில் உள்ள திருவேதிக்குடியில் வேதபுரீஸ்வரம் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மகாமண்டபத்தில் வேத விநாயகர் நான்கு வேதங்களையும் செவி சாய்த்து கேட்கும் நிலையில் அற்புதமாகக் காட்சி தருகிறார்.

எட்டு கரம் கொண்ட பெருமாள்

சங்கு, சக்கரம், வாள்(வில்), கோதண்டம், கதை முதலியவற்றை தாங்கி நிற்கும் மகாவிஷ்ணு ‘பஞ்சாயுதன்’ என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். இவற்றுடன் மேலும் அம்பு, கேடயம், மலர் போன்றவற்றை தாங்கி எட்டு திருக்கரங்களுடன் காஞ்சிபுரத்தில் ‘அட்டபுயகரம்’ என்ற திருத்தலத்தில் மகாவிஷ்ணு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சிவனாக ஆஞ்சநேயர்

சேலம் அருகில் உள்ள சின்னாளப்பட்டியில் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று மட்டும் கால்சட்டை, மேல்சட்டை அணிவித்து சிறுவன் வடிவில் காட்சியளிக்கிறார். அந்த நாளில் பள்ளி சிறுவர் நூற்றுக்கணக்கில் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

- ஆர்.கே.லிங்கேசன்