விதவிதமாய் துர்க்கா தேவி



மங்களூரிலிருந்து 35 மைல் தூரத்தில் கடில் நகரில் துர்க்கா தேவி லிங்க வடிவில் காட்சி தருகின்றாள்.இமயத்தில் அபயநந்தா நதிக்கரையில் கிருஷ்ண பரகின்மயா கோயில் உள்ளது. இங்கு துர்க்கைக்கு சிலை ஏதுமில்லை. ஒரு தண்டத்தை துர்க்கையாக பாவித்து பூஜை செய்கின்றனர்.திருநெல்வேலிக்கு அருகிலுள்ள பராஞ்சேரியில் சயன நிலையில் துர்க்கை காட்சியளிக்கிறாள்.

மேல் மலையனூர் ஏரிவனத் துர்க்கை எட்டுக் கரங்களுடன் அருள்பாலிக்கிறாள்.தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் ஆசூரி துர்க்கை இடதுகரத்தில் சூலமும், வலதுகரத்தில் பாத்திரமும் அங்குசமும் கொண்டவள். பாம்பை பூணூலாகத் தரித்து தரிசனமளிக்கிறாள்.கதிராமங்கலம் வனதுர்க்கை, லட்சுமியின் அம்சமாக தாமரைப்பூவின் மீது எழுந்தருளியிருக்கிறாள். கடலூர் மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் துர்க்கையின் சிரசின் மீது சீறும் நாகம் படம் எடுத்தாடுகிறது. நான்கு கரங்கள். அவற்றில் ஒரு கரம் தீச்சட்டியையும், மற்றொன்று காட்டாரியும் தாங்க உக்கிரசண்டியாக துர்க்கை திகழ்கிறாள்.

கடாரம் கொண்டான் (நனிபள்ளி) தலத்தில் துர்க்கை சக்கரம் ஏந்திய கோலம் பூண்டிருக்கிறாள். பட்டீஸ்வரம் துர்க்கைக்கு மூன்று கண்கள். இதனால் திருநேத்ரகாளி என்று பெயர். இங்கு மட்டும்
அபூர்வமாக சிம்ம வாகனம் இடப்புறம் இருக்கிறது.

- நெ.இராமன்