வாடகைதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை



வளம் தரும் வாஸ்து


அன்றாட நிகழ்வுகளில் நாம் கடைபிடிக்கும் சில நடைமுறைகளையும், அவற்றினால் நாம் பெறும் பலன்களையும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில வாஸ்து அமைப்புகளைப் பார்ப்போம். வாடகை வீடாக இருப்பினும் அதில் சில சிறு அமைப்பினையாவது தெரிந்து கொண்டால், அதன்படி இருப்பின் பெரும் நன்மைகளை பெறமுடியும்.

வாடகை காரில் (Taxi)   போனால் விபத்து வராதா? Taxi யில் போனால்  Accident   வராதா?  சொந்த காரில் மட்டுமே விபத்து வரும் என்று இல்லை. இந்த வகையில் வாடகை வீடாக இருப்பின், 75% நன்மை அல்லது பாதிப்பை வாடகைதாரரும், வீட்டு உரிமைதாரர் 25%மும் பெறுவார்கள்.

எனவே வாடகை வீடு தேடுபவர்களும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும் இக்குறிப்புகளை கடைபிடித்து நற்பலன்கள் பெறுவதோடு அவர்களுக்கு சொந்த வீடு அமைய வாஸ்து பகவானை வணங்கு வோம்.

* வடக்கு/கிழக்கு திசையில் குறைந்த பட்ச காலியிடம் இருக்குமானால் அதை உபயோகப்படுத்தி வருவது மிகவும் நன்மை தரும். பொது சுவராகவோ, கட்டிடத்திற்கு வெளியே வடக்கு/கிழக்கில் உபயோகமின்றி இருப்பது ஆண்/பெண் இருவருக்கும் செயல்தோஷம் உண்டாகி பெரும் பிரச்னைக்கு ஆளாவார்கள்.

* வீட்டின் பிரதான வாயில் வடக்கு- வடகிழக்கு, கிழக்கு-வடகிழக்கு, தெற்கு-தென்கிழக்கு, மேற்கு-வடமேற்கு ஆகிய உச்சஸ்தானங்களில் இருக்க வேண்டும். மாறுபட்டு இதற்கு எதிர்முனைக்கு எந்த அளவில் தள்ளியிருக்கிறதோ அந்த அளவிற்கு கெடுபலன்கள் வந்தடையும். தெற்கு மேற்கு வீடுகளுக்கு வடக்கு-கிழக்கில் பின்வாசல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* மொத்த வீட்டின் வடகிழக்கு பகுதியில் மாடிப்படிகள், சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிவறைகள் இடம் பெறக்கூடாது.

இந்த மூன்று பிரதான குறிப்புகளை வாடகைதாரர்கள் கவனத்தில் கொண்டாலேயே சிறப்பான பலன்களை அடைய முடியும்.நம் வாஸ்து விஞ்ஞானம், மனையடி சாஸ்திரம் வெளிநாடுகளுக்கு சென்று இந்திய மண்ணின் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் இதே வேளையில், அன்னிய மண்ணிலிருந்தும் இந்த விஞ்ஞானத்தின் சில கூறுகள் நம்மிடையே பரவி வருகிறது. இவற்றில் முதன்மையானதாக சீனாவின் “பெங்சூயி’’ என்னும் கட்டிடக் கலை விஞ்ஞானமும் ஒன்று. இதைப் பற்றி சிறிதளவு காண்போம்.

பிரபஞ்சத்தை சீனர்கள் நம் பஞ்ச பூதங்களை போலவே ஐந்தாகப் பிரித்துள்ளனர். அவை நிலம், நீர், நெருப்பு, மரம் மற்றும் உலோகம். இவை ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக கருதப்பட்டது. இதை ஒரு சுழற்சியாகவும் கொள்ளமுடியும்.

இரு வேறுபட்ட வலிமைகள் ஒன்று சேர்ந்து எதிர்முனை, நேர்முனை மின்சாரம் போல, இப்பிரபஞ்சத்தை தோற்றுவித்தன என்பது சீனர்களின் கருத்தாகும். இப்பூவுலகை யாங் + யின் என்று நிலம், நீராக பகுத்தனர்.

பெங்சூயியின் இயைபுபடி சூழ்நிலைக்கு ஏற்ப யின்யாங் சமன்படுத்துதல் மாறுப்பட்டுக் கொண்டே இருக்கும்.ச்சீ மற்றும் ஷாச்சீ - ஆரோக்கியம், அமைதி, அரவணைப்பு, செல்வம், செல்வாக்கு, புகழ் போன்றவற்றை அளிக்க வல்லது. இது நிதானமாக, மெதுவாக செல்லக்கூடியது.

அதிவேகத்தில் பயணிக்கும் ‘ச்சீ’ மாறி, கெடுபலன்களை அளிக்கும் ‘ஷா’வாக மாறிவிடும். ‘ஷா’ அழிவுப்பாதையில் பயணிக்கும். நேராக வரக்கூடியது. ஈட்டி போல் பாயும். ‘ஷா’ 180 டிகிரியில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்த இடங்களிலிருந்து அதை அகற்றாவிட்டால் அது நல்ல சக்திகளை மாற்றி அழித்துவிடுகிறது.

ஆழ்ந்த நன்மை தரும் நிரந்தர ‘ச்சீ’யும் ‘ஷா’வாக மாறிவிடும். ‘ச்சீ’ குறைவாக இருக்கும் இடங்களை கண்டறிந்து இதை அதிகப்படுத்த வேண்டும். ‘ச்சீ’ வாசல் வழியே உட்புகுந்து வேறு வழியே வெளியேறும். ‘ச்சீ’யை முடிந்தவரை தக்கவைத்துக் கொள்வது நல்லது. எனவே, வீட்டில் எப்பகுதியில் ச்சீ அதிகம் தேவைப்படும் என்பதை அறிந்து அதை அங்கே பெருக்கிக்கொள்ளும் யுக்திகளை கவனிப்போம். இவை பரிகாரங்களாக கூறப்பட்டுள்ளனவே தவிர நிரந்தர ஆக்கப் பூர்வமான கோட்பாடுகள் அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கிரிஸ்டல்: பளபளப்பான கற்கள் கிரிஸ்டல் எனப்படும். இவற்றை பட்டை தீட்டியோ, ஒளிரும் வகையிலோ அறையில் வைக்கலாம். ப்ரிசம் (றிஸிமிஷிவி) போலவும் இவற்றை பயன்படுத்தலாம். அரண்மனை, அலங்கார மண்டபங்கள் போன்றவற்றில் கிரிஸ்டல்களை தொங்க விட்டிருப்பதைக் கண்டு அதன் செல்வ செழிப்பை உணர முடியும்.

பளபளப்பான பொருட்களும் கிரிஸ்டல்களாக மாற்றி ‘ச்சீ’யை வரவழைத்து ஆக்கப்பூர்வ சக்தியை உள் கொணர முடியும். டீப்பாய், மேஜை, ஷோகேஸ், டைனிங் டேபிள், சுவாமி அறை, பீரோ போன்ற இடங்களில் இவற்றை அமைத்து நல் சக்தியை அவ்வப்போது நிலைபெறச் செய்ய வேண்டும்.சிம்ஸ்:

 காற்றில் ஓசை எழுப்பக் கூடிய சிறு உலோகத்துண்டுகளுடன் கூடிய குழல்களை இணைத்து தயாரிக்கப்பட்டவை. இச்சிறு குழல்கள் காற்றின் வேகத்தால் அசைந்து ஒன்றுடன் ஒன்று மோதி ‘ச்சீ’ சக்தியை உண்டாக்கி நல்ல சக்தியை அறை முழுவதும் நிலைக்கச் செய்யும்.

இருட்டான மூலை, பின்தங்கிய வியாபார நிறுவனம், நோயாளி உள்ள இடம், சமையலறையில் இவற்றை தொங்கவிடும் போது அவ்விடங்களில் ஆற்றல் மிக்க சக்திகளை உண்டாக்கி அவ்விடங்களை சீர் செய்தும், நற்தன்மையுடையதாகவும் மாற்றும். புத்த விஹார்களில் இவற்றை நிறைய காண முடியும்.

(தொடரும்)

வாஸ்து பாஸ்கர்