செப்டம்பர் மாத பிரசாதங்கள்




கடலைப் பருப்பு இனிப்பு சுண்டல்

என்னென்ன தேவை?


கடலைப் பருப்பு - 500 கிராம், சிறு சிறு பல்லாக நறுக்கிய  தேங்காய்  - 1 கப், ஏலக்காய் தூள் - லு டீஸ்பூன், சுக்கு தூள் - லு டீஸ்பூன், நெய் - தேவைக்கேற்ப, பொடித்த முந்திரி - 12, வெல்லம் - 200 கிராம், உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது? 


கடலைப் பருப்பை வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். நெய்யில் தேங்காய்ப் பல், முந்திரியை வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடி கட்டி மீண்டும் கட்டியாகும்வரை காய்ச்சி இறக்கி இதனுடன் வடித்த கடலைப் பருப்பு, தேங்காய், முந்திரி, சுக்கு தூள், ஏலக்காய், உப்பு சேர்த்து கலக்கவும். இனிப்பான சுண்டலாக பரிமாறவும். குறிப்பு : பாகு அதிக நேரம் காய்ச்சக் கூடாது. சுண்டல் உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

சிவப்பு அவல் புட்டு சுண்டல் (நவராத்திரிக்கு)

என்னென்ன தேவை?


கைக்குத்தல் சிவப்பு அவல் - 200 கிராம், தேங்காய்த் துருவல் - லு கப், நெய் - சிறிதளவு, ஏலக்காய் தூள் - லு டீஸ்பூன், சர்க்கரை - 1 கப், முந்திரி, திராட்சை - தலா 12.

எப்படிச் செய்வது? 


அவலை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்து பொடிக்கவும். பின் தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊறவிடவும். ஒரு இட்லி பாத்திரத்தில் வறுத்து பொடித்த ஊறவைத்த அவலை ஆவியில் வேக விடவும். நன்றாக வெந்தவுடன் எடுத்து சிறிது ஆறியதும் தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய், நெய்யில் வறுத்த முந்திரி-திராட்சை, ஏலக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும்.  
குறிப்பு : இந்த கைக்குத்தல் அவல் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். நவராத்திரிக்கு வரும் குழந்தைகளுக்கு இந்த சத்தான புட்டைக் கொடுக்கலாம். சர்க்கரைக்கு பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்.

கடலை மாவு பர்ஃபி

என்னென்ன தேவை?


கடலை மாவு - 1 கப், சர்க்கரை - 1 கப்(இனிப்பு விருப்பத்திற்கேற்ப), நெய் அல்லது வனஸ்பதி - 2லு கப்.

எப்படிச் செய்வது? 

கடலை மாவை லேசாக சிறிது நெய் சேர்த்து பச்சை வாசனை போக வறுக்கவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் சர்க்கரையில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கம்பி பாகு பதம் வரும்போது கடலை மாவை சேர்த்து கிளறிக் கொண்டு இருக்கவும். நெய் சேர்த்து கிளறி அது நுரைத்து வரும்போது நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக போடவும்.

காய்ந்த பட்டாணி கேரட் சுண்டல் (நவராத்திரிக்கு)

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி - லு  கிலோ, கறிவேப்பிலை, கடுகு - தாளிக்க, தேங்காய் - 1 மூடி (துருவியது), மிளகாய் வற்றல் - 8 (கிள்ளி தாளிக்க), உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1 டீஸ்பூன், துருவிய கேரட் - லு கப்,
மாங்காய் - லு கப் (துருவியது).

எப்படிச் செய்வது? 

காய்ந்த பட்டாணியை 8 மணி நேரம் ஊறவிடவும். பின் உப்பு சேர்த்து குக்கரில் தேவையான தண்ணீர் விட்டு பட்டாணியை வேகவிட்டு வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதன் மேல் துருவிய தேங்காய், கேரட், மாங்காய், வடித்து வைத்த பட்டாணி எல்லாவற்றையும் சேர்த்து கலந்து  பிரசாதமாக படைத்து பின் நவராத்திரிக்கு வருபவர்களுக்குப் பரிமாறவும். குறிப்பு : நைவேத்யமாக சுண்டல் செய்யும்போது பெருங்காயம் சேர்ப்பதில்லை. தேவைப்பட்டால் நைவேத்தியம் செய்த பின் சேர்க்கலாம்.

தொகுப்பு: ஆர்.வைதேகி
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி