மேல் படிப்பு விருப்பங்களை நிறைவேற்றும் ஹய்கரீவ கவசம்



அபூர்வ ஸ்லோகம்


ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவச் செல்வங்கள் தங்கள் மேல் படிப்புக்காக ஏற்கெனவே திட்டமிட்டிருப்பீர்கள். அது சம்பந்தமாக விண்ணப்பிப்பதும், அந்தப் படிப்புக்கு ஆயத்தம் செய்துகொள்வதுமாக இருப்பீர்கள். சிலருக்கு அந்தப் படிப்பில் சேர அழைப்பும் வந்திருக்கலாம். இந்த காலகட்டத்தில், உங்களுடைய அந்த மேல் படிப்பு எந்தக் குறையுமில்லாமல், மிகவும் வெற்றிகரமாக அமைய கல்வித் தெய்வமான ஹயக்ரீவர் உதவியாக இருப்பார். அவரது கவசத்தை உளமுருக தினமும் பாடி, மேல் படிப்பு மட்டுமல்ல, அதற்கும் மேல் படிப்பையும், அதன் தொடர்ச்சியாக சிறப்பான வேலை வாய்ப்பையும் பெற அவர் அருள் பெறுங்கள். ஆல் தெ பெஸ்ட்.

பார்வத்யுவாச:
தேவதேவ மஹாதேவ கருணாகர சங்கர
த்வயா ப்ரஸாத ஸீலேன கதிதானி ரமாபதே
பஹுனாமவதாராணாம் பகுனி கவசானி ச இதானீம் ஸ்ரோதுமிச்சாமி ஹயாஸ்ய
கவசம் விபோ

பொதுப் பொருள் : ‘‘தேவர்களுக்கெல்லாம் தேவனாக, மகாதேவனாக விளங்கும் கருணா மூர்த்தியே, சங்கரா! எல்லோருக்கும், எப்போதும் நன்மைகள் அருள்வதையே தங்கள் அருங்குணமாகக் கொண்டவரே, மஹாலக்ஷ்மி நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பல அவதாரங்களைப் பற்றியும், அந்த அவதாரங்களுக்
குரிய பல கவசங்களைப் பற்றியும் இயம்பிய இமையோனே, இப்போது ஹயக்ரீவ கவசத்தை உலகோர் நன்மை பொருட்டு அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்று சிவபெருமானிடம் விண்ணப்பிக்கிறாள் பார்வதி தேவி.
சிவ உவாச:

தேவி ப்ரியம் வதே துப்யம் ரஹஸ்யமபி
 மத்ப்ரியே
கலஸாம்புதிபீயூஷம் ஹயாஸ்ய கவசம் வதே
சிவபெருமான் உரைக்கிறார்: ‘‘எனக்கு ப்ரியமாக உள்ள தேவியே, எப்போதும் அன்பானவற்றை மட்டுமே பேசுபவளே, பாற்கடலிலிருந்து எடுத்த அமிர்தம் போன்ற, மிகவும் ரகசியமான மந்திரமாகக் கருதப்படும் ஹயக்ரீவ கவசத்தை உனக்காகவும், உலகோர் நன்மைக்காகவும் வழங்குகிறேன்.’’
மஹாகல்பாந்தயாமின்யாம் ஸஞ்சரம் ஸது ஹரிஸ்வயம்
லீலயாஹயவக்த்ராக்ய ரூபமாஸ்தாய யோஹரத்

மஹாப்ரளயம் தோன்றி முடிந்த சமயம், ஹயக்ரீவன் என்ற அசுரன், வேதங்களை
அபகரித்துச் சென்றுவிட்டான். உடனே தானும் குதிரை முகம், மனித உடல் கொண்டு, ஹயக்ரீவ அவதாரம் எடுத்து, மஹாவிஷ்ணு அந்த அரக்கனை வதைத்து, வேதங்களை மீட்டார். (பிறகு அவற்றிற்கு உரியவனான பிரம்மனிடம் அளித்தார்) அப்படி
கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த ஹயக்ரீவரைப் போற்றும் கவசம் இது.
புத்ரவாத்ஸல்யதோ மஹ்யம்
விரிஞ்சிருபதிஷ்டவான்

ஹயாஸ்ய கவசஸ்யாஸ்ய ருஷிர்ப்ரஹ்மாப்ர
கீர்த்திதஅப்படி வேதங்களை மீட்டுக்கொடுத்த ஹயக்ரீவரைத் துதித்து பிரம்மன்
உபதேசம் செய்த ஹயக்ரீவ கவசம் இது.
இதனாலேயே ‘ப்ரும்மா ருஷி’ என்று இக்கவசம் அழைக்கப்படுகிறது.
சந்தோனுஷ்டுப் ததா தேவோ ஹயக்ரீவ
உதாஹ்ருத
ஹ்ரௌம்பீஜம் து ஸமாக்யாதம் ஹ்ரீம் ஸக்திஸ்
ஸமுதாஹ்ருதா

ஓம் கீலகம் ஸமாக்யாதம் உச்சைருத்கீலகம் ததா
‘அனுஷ்டுப் சந்தஸ்’ என்றும் ஹயக்ரீவர் தேவதை என்றும் சொல்லப்பட்டது. ‘ஹ்ரௌம்பீஜம்’என்றும் ‘ஹ்ரீம் சக்தி’ என்றும் அந்த உண்மை விவரிக்கப்பட்டது. ‘ஓம் கீலகம்’ என்றும் ‘உறக்க உத்கீலகம்’ என்றும் கூறப்பட்டது.
லக்ஷ்மீகராம் போருஹ ஹேமகும்ப
பீயூஷபூரைரபிஷிக்த ஸீர்ஷம்

வ்யாக்யாக்ஷமாலாம்புஜபுஸ்தகானி
ஹஸ்தைர்வஹந்தம் ஹயதுண்டமீடே

ஸ்ரீமஹாலக்ஷ்மி, தாமரை போன்ற தன் மலர்க்கரங்களில் அமிர்தம் நிரம்பிய ஸ்வர்ண குடத்தை ஏந்தியிருக்கிறாள்.
சின்முத்திரை, அக்ஷ மாலை, தாமரை, புத்தகம் ஆகியவற்றை தம்
 திருக்கரங்களில் தாங்கியிருக்கும் ஹயக்ரீவருக்கு அந்த அமிர்தத்தால் மஹாலக்ஷ்மி அபிஷேகம் செய்கிறாள்.
 இத்தகைய ஒப்பற்ற ஹயக்ரீவரை நான் துதி
செய்கிறேன்.
ஸுதாஸிக்தஸ்ஸிர பாது பாலம் பாது ஸஸிப்ரப
த்ருஸௌ ரக்ஷது தைத்யாரி நாஸாம் வாக்ஜ்ரும்
பவாரிதி
ஸ்ரோத்ரம் பாது ஸ்திரஸ்ரோத்ர கபோலௌ
 கருணாநிதி
முகம் பாது கிராம் ஸ்வாமீ ஜிஹ்வாம்
பாது ஸுராரிஹ்ருத்

அப்படி அமிர்தத்தால் அபிஷேகிக்கப்பட்ட ஹயக்ரீவ பகவான் என் தலையைக் காக்கட்டும். சந்திரன்போல ஒளிமிகுந்த ஹயக்ரீவர் என் நெற்றியைக் காக்கட்டும். அசுரர்களுக்குப் பகையான அவர் என் கண்களைக் காக்கட்டும். கடல்போன்ற வாக்கு பெருக்கு கொண்ட பகவான் என் மூக்கைக் காக்கட்டும். நுட்பமான கேள்விஞானம் கொண்ட பகவான் என் காதுகளைக் காக்கட்டும். அந்தக் கருணைக் கடல் என் கன்னங்களைக் காக்கட்டும். வாக்கிற்குத் தலைவன் என் முகத்தைக் காக்கட்டும். தேவதைகளின் எதிரிகளை வதம் செய்பவன் என் நாக்கைக் காக்கட்டும்.
ஹனூம் ஹனூமதஸ்ஸேவ்ய கண்டம்
 வைகுண்டநாயக
க்ரீவாம் பாது ஹயக்ரீவ ஹ்ருதயம் கமலாகர
உதரம் விஸ்வப்ருத் பாது நாபிம்
பஞ்கஜ லோசன
மேட்ரம் ப்ரஜாபதி பாது ஊரூ பாது கதாதர
ஜானூனீ விஸ்வப்ருத் பாது ஜங்கே ச
ஜகதாம் பதி

கும்பௌ பாது ஹயத்வம்ஸீ பாது விக்ஞான
 வாரிதி
ஹனுமாரால் வணங்கப்பெறும் பகவான் என் தாடையைக் காக்கட்டும்.  வைகுண்டநாதன் என் கண்டத்தைக் காக்கட்டும். ஹயக்ரீவர் என் கழுத்தைக் காக்கட்டும். மஹாலக்ஷ்மிக்கு இருதயத்தை இருப்பிடமாகத் தந்த பகவான் என் இருதயத்தைக் காக்கட்டும். உலகத்தையே காப்பவர் என் வயிற்றைக் காக்கட்டும். தாமரைக் கண்ணனான பகவான் என் நாபியைக் காக்கட்டும். ப்ரஜாபதியான பகவான் என் குறியைக் காக்கட்டும். கதாயுதம் ஏந்தியவன் என் தொடைகளைக் காக்கட்டும். உலகத்தையே தாங்குபவன் என் முழங்கால்களைக் காக்கட்டும். உலகங்களுக்கெல்லாம் நாயகன் என் ஆடுசதையைக் காக்கட்டும். ஹயாசுரனை வதம் செய்த பகவான் என் புறங்கால்களைக் காக்கட்டும். அறிவுக் கடலான அந்தப் பரம்பொருள் என் பாதங்களைக் காக்கட்டும். 
ப்ராச்யாம் ரக்ஷது வாகீஸ தக்ஷிணஸ்யாம்
வராயுத

ப்ரதீச்யாம் விஸ்வப்ருத் பாது உதீச்யாம்
ஸிவவந்தித
ஊர்த்வம் பாது ஹரிஸ்ஸாக்ஷாத் அத
பாது குணாகர
அந்தரிக்ஷே ஹரி பாது விஸ்வத பாது
விஸ்வஸ்ருட்

ஈஸ்வரன் கிழக்கு திக்கிலிருந்து என்னைக் காக்கட்டும். சிறந்த ஆயுதத்தைத் தரித்திருக்கும் பகவான் என்னை தெற்கு திசையிலிருந்து காக்கட்டும். உலகத்தையே தாங்குபவன் மேற்கு திக்கிலிருந்து காக்கட்டும். சிவனால் போற்றப்பட்ட பகவான் வடக்கு திசையிலிருந்து காக்கட்டும். மஹாவிஷ்ணு சொரூபியானவன் உயரத்திலிருந்தும், கல்யாண குணங்கள் நிரம்பியவன் கீழிருந்தும் காக்கட்டும். ஹரி ஆகாயத்திலிருந்து காக்கட்டும். உலகைப் படைத்தவன் நான்கு பக்கங்களிலிருந்தும் காக்கட்டும்.
ய ஏதத்கவசம் தீமான் ஸன்னஹ்யேந்நிஜவிக்ரஹே
துர்வாதி ராக்ஷஸவ்யூஹை ஸ கதாசிந்ந
பாத்யதே

படேத்ய ஏதத் கவசம் த்ரிஸந்த்யம் பக்தி பாவித
மூடோபி கீஷ்பதிஸ்பர்த்தீ ஜாயதே நாத்ர
ஸம்ஸயமேலே உள்ள இந்தக் கவசத்தை தினமும் மூன்று வேளைகளில் (அதிகாலை, மத்தியானம், சாயங்காலம்) உளமாற படிப்பவர்களுக்கு பகைவர் இருக்கமாட்டார்கள். எதிர்வாதம் செய்பவர்கள், அசுர குணம் கொண்டவர்களால் எந்த காலத்திலும் துன்பப்படமாட்டார்கள். கல்வியில் பின்தங்கியவர்களாக இருந்தாலும், வெகு விரைவில் தேர்ந்த கல்விமானாக, தத்தமது துறையில் விற்பன்னராகத் திகழ முடியும். அறிவிற் சிறந்தவராகத் திகழ முடியும்.