வளம் தரும் வாஸ்து



நிம்மதியான உறக்கம் தரும்  படுக்கையறை அமைப்பு

வடக்கு திசையில் சாலை அமையக் கூடிய இடத்தின் கட்டிட அமைப்புகள் பார்த்து வரும் நாம், இப்போது படுக்கை அறை, குளியலறை ஆகியவை அமைய வேண்டியது குறித்து காண்போம். படுக்கை அறையை முந்தைய காலங்கள் போல் அல்லாமல் மாறுபட்ட முறையில் அமைப்பதால் பல சிரமங்களை எதிர் கொண்டு வருகிறோம். அவற்றைக் கண்டறிந்து குறைகளை களைந்து சிறப்பான படுக்கை அறையை அமைப்போம்.படுக்கை அறை, மிகவும் ஆராய்ச்சி பூர்வமாக அமைக்க வேண்டிய அமைப்பாகும்.படுக்கை அறை ஈசான்யத்தை தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் தென்மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு பகுதியில் அமைக்கும்போது, அந்தந்த திசைக்கென்றே ஒவ்வொரு சிறப்பு உள்ளது.

தென்மேற்கு பகுதி: படுக்கை அறையை தென்மேற்கில் அமைப்பது மிகவும் சிறந்தது. பூமியானது வடகிழக்காக சாய்ந்திருப்பதால் பாரத்தை தென்மேற்கில் வைக்கவும். ஒரு நாளில் நாம் அதிக நேரம் செலவிடும் அறை, படுக்கை அறை. இரவில், தூங்கத்தான் அதைப் பயன்படுத்துகிறோம் என்றாலும், ஒரு நாளில் பிற பணிகளுக்காக நாம் செலவிடும் நேரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இது அதிகமாகவே அமைகிறது. இயல்பாக படுக்கை அறையிலேயே பீரோ போன்ற கனமான பெட்டகங்களை வைத்திருக்கும் பழக்கம் நம்மிடையே உண்டு. கனமான பொருட்களை தென்மேற்கில் வைக்க வேண்டும் என்பதாலும், படுக்கை அறையில் பாதுகாப்பு கருதியும் வைக்கிறோம்.

படுக்கை அறையில் பரண் எனப்படும் ‘லிளிதிஜி’ தெற்கு அல்லது மேற்கில் ஏதேனும் ஒரு திசையில் மட்டும் அமைப்பது நல்லது. இரு திசைகளிலும் பரண் அமைக்கும்போது காற்றாடி (திணீஸீ) மூலம் காற்று வீசுவது கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிடும். படுக்கை அறையில் பிற பணிகளை செய்வது நல்லதல்ல. அலுவலகப் பணியைப் பார்க்க மேஜை, பொழுதுபோக்க டி.வி. என்று படுக்கையறைக்குள் பொருத்தி, அந்த விஷயங்களை செய்யாமல் இருப்பதுதான் நல்லது.

ஆனால், நாம் படுக்கை அறையில் அலுவலகப் பணி செய்கிறோம், டி.வி. பார்க்கிறோம். இதனால், உறக்கம் கெட்டு, அதனால் உடல்நலமும் கெடும்.  வாழ்க்கைத் துணையுடன் சண்டையிடும் சந்தர்ப்பமும் வரலாம்.  வன்முறை, குழப்பக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை தொலைக்காட்சிப் பெட்டியில் பாப்பதும்  கூடாது.  லேப்டாப்பை படுக்கையறையில் உபயோகிப்பதால், அது நேரத்தை சுவாரஸ்யம் ஆக்குவதோ, மிச்சம் பிடிப்பதோ ஆகாது.

மாறாக வாழ்க்கை முறையை தலைகீழாக மாற்றும் பிரச்னைகளுக்கு இந்தச் செயல்கள் அடிகோலாக அமைகின்றன.
ஆக, படுக்கை அறை என்பதை மன அமைதிக்கான, உடல் ஓய்வுக்கான இடம் என்பதை மனதில் நிறுத்த வேண்டியது அவசியம். நம் பழக்க வழக்கங்களை படுக்கையறை அமைப்பதன் நோக்கத்திற்கு மாற்றிக் கொள்வதோடு வாஸ்து முறைப்படி அமைப்பதாலும் பல நன்மைகள் கிட்டும்.

படுக்கை அறையை தென்மேற்கில் அமைத்து தென்கிழக்கு-வடமேற்கில் 4ஙீ4 அடி அளவுள்ள ஜன்னல் அமைக்கவும். படுக்கை அறையின் கிழக்கு அல்லது வடக்கில் குளியலறையை அமைத்துக் கொள்ளவும்.படத்தில் உள்ளது போல் பரண் மற்றும் பரணுக்கு கீழ் ஷெல்ஃப் ஆகியவற்றை மேற்கில் அமைக்கலாம். இப்படி அமைக்கும்போது சூரியனின் வெயில் தாக்கத்திற்குத் தடுப்பு அரணாக இருந்து, அறையில் குளிர்ச்சி அதிகரிக்கும்.

படுக்கை அறையில் கண்ணாடியை பயன்படுத்தலாகாது. படுக்கையின் எதிரொளி கண்ணாடியில் பட்டு, இயல்பான உறக்கம் கெடும். படுக்கையின் எதிரொளி நிம்மதியை கெடுக்கும். எனவே அலங்காரம் செய்யும் கண்ணாடியை மூடி வைக்கவும். அல்லது படத்தில் காட்டியபடி (ஞிக்ஷீமீssவீஸீரீ ஸிஷீஷீனீ) அலங்கார அறையில் வைத்துக் கொள்ளலாம். நிறைய இடங்களில் மின் விசிறியை அறையின் மையத்தில் அமைக்கின்றனர். இது முற்றிலும் தவறு. மாறாக படுக்கை அறையின் தென்மேற்கு பகுதியில் படுக்கையை அமைக்க வேண்டி இருப்பதால் படுக்கைக்கு மேலே மின் விசிறி இருக்குமாறு அமைக்கலாம்.

படுக்கையில் தெற்கில் தலை வைத்து உறங்குவது மிகவும் சிறப்பானது. அவ்விதம் இயலாத நிலையில் மேற்கில் தலை வைத்து  உறங்கலாம். இது ஆழ்ந்த நித்திரையை அளிக்க வல்ல சூட்சுமமாகும்.வடக்கில் தலை வைத்து உறங்கும் போது பூமிக்கே உரித்தான காந்த இழுவிசை காரணமாக ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு (ரத்தத்தில் இரும்புச்சத்து உள்ளது) உறக்கத்தில் இடையூறு ஏற்பட்டு உறக்கம் கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் வடக்கில் கட்டில் மற்றும் நம் உடல் ஆகியவை அதிக பாரமாவதும் உறக்கமின்மைக்கு காரணமாக அமைகிறது. பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதால், தலையை மேற்கில் வைப்பது, பூமியின் இயல்பான ஓட்டத்திற்கு ஈடாக இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் திடமாக கூறுகிறது. கிசி யை கிழக்கு/வடக்கு சுவரில் வைத்தால்தான் சிறப்பாக இருக்கும். மாறாக தலை பகுதிக்கு மேல் அமையுமானால் தொடர்ந்து வீசும் குளிர்ச்சியான காற்று உடலை குளிர்ச்சியாக்கி உடல்நலத்தைக் கெடுக்கும். மேலும் மூச்சில் தேவையற்ற குளிர்ச்சி சென்று நுரையீரலை பாதிப்படைய செய்யும்.

அலங்கார அறை (Dressing Room) கண்ணாடியை கிழக்கு/வடக்கு சுவரில் அமைத்துக் கொள்ளலாம். குளியலறையில் கிழக்கு/மேற்கு சுவரில் குழாய் அமைத்து கிழக்கு/மேற்கு நோக்கி குளிக்கும் வகையில் இருக்க வேண்டும். சூரிய திசையைப் பார்த்தபடி குளிப்பது மிகவும் சிலாக்கியமானது. படத்தில் படுக்கை அறைக்கு கிழக்கு திசையில் குளியலறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடக்கிலும் குளியலறை அமைத்துக் கொள்ள முடியும். சிறு வெளிச்சம் வரக்கூடிய வகையில் ஒரு விளக்கு (Bed light) எரிந்து கொண்டிருப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

தென்மேற்கில் வீட்டின் எஜமானர்களும், வடமேற்கில் மற்றவர்களும், விருந்தினர்களும், தெற்கு/தென்கிழக்கில் குழந்தைகளும், திருமணமாகாதவர்களும் படுக்கை அறை அமைத்து பயோகிப்பது சிறந்த பலனை கொடுக்கும். படுக்கை அறையில் இயற்கை காட்சிகள், நீர் வீழ்ச்சிகள், உயரமான மலைகள், நெடுந்துயர்ந்த மரக்காட்சிகள், கடல் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தினால் அமைதியான உறக்கம் வந்து மறுநாள் சிறப்பாக செயல்படும் தெம்பைப் பெறலாம்.  இதே அறையின் தென்மேற்கின் பீரோ போன்ற பாதுகாப்பு பெட்டகங்களில், உள்ளே தெற்கு/மேற்கில் பணம், நகை போன்றவற்றையும், கிழக்கு/வடக்கில் பத்திரங்கள் ஏனைய கடித விஷயங்களையும், கல்வி சான்றிதழ்களையும், பாஸ்போர்ட் போன்ற வற்றையும் வைக்க சிறப்பான பலன்களை தரும்.

அவ்வப்போது குண்டுமல்லிகை, சந்தனக்குச்சிகளை போட்டு வைத்திருந்தால் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன் விரய செலவுகள் கட்டுப்படுவதும் ஏற்படும். செந்நாயுருவி செடியை பதப்படுத்தி மஞ்சள் துணியில் கட்டி உள்ளே வைத்தால், சம்பந்தமில்லாத செலவுகள் குறைக்கப்பட்டு, கடனில்லாத வாழ்க்கையை வாழ முடியும். தினசரி பீரோவை கையாளும் பொழுது அவரவர்கள் பஞ்ச பட்சி நேரத்தில் கையாண்டால் பல தலைமுறைகளுக்கும் அழியாத செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். காசு வைக்கக் கூடிய இடத்தில் ஏனைய துணிமணிகளை வைக்காமல் இருப்பது சிறந்தது. எல்லாம் சரி, அது என்ன பஞ்ச பட்சி நேரம்?

(தொடரும்)