எது மாதிரியும் இல்லாமல் , புது மாதிரியாக...



Anmega palan 
magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

 
                 ‘பரமேஸ்வரனும் பஞ்சபூதங்களும்’ கட்டுரை இதுவரை எந்த ஆன்மிக இதழும் தராத விளக்கம். மிக மிக அற்புதம். படித்து பாதுகாத்து பின்வரும் சந்ததிக்குத் தர உதவியாக உள்ளது ஆன்மிகம் பலன்.
- பி. குமார், குளித்தலை.

ஆன்மிகமா, ஆன்மீகமா என்று தெளிவாகத் தெரியாமல் நெடுநாட்களாகக் குழம்பிக் கொண்டிருந்த எனக்கு ஆசிரியரின் தலையங்கம் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. முன்னறிவிப்புடன் வரும் பகுதிளே எப்போது வரும் என்று ஆர்வமுடன் காத்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு முன்னறிவிப்பின்றியும் நிறைய வியப்புகள் காத்திருக்கின்றன என்று கூறி இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி விட்டீர்கள்.
- மு. மதிவாணன், அரூர். 

பஞ்சபூதங்களும் சிவனில் அடக்கம் என்பதனை சிவாலயக் குறிப்புகளோடு தொகுத்து எம்மை தெளிவுறச் செய்தீர்கள். தமிழ் பக்தி பாடல்கள் இதுவரை எந்தவொரு ஆன்மிக இதழும் வெளியிடாதது. ஆன்மிகம் பலன் படித்து பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பொக்கிஷம் என்றால் மிகையல்ல.
-கே.வீரராகவன். மாதவரம்.

தெய்வீக விஷயங்கள் தெய்வத் திருவுருவங்கள் அனைத்தும் நேரில் கேட்டு, பார்ப்பது போல் அமைந்துள்ளது. அட்டையில் அம்மையப்பரின் அருட்காட்சி அருமை. தொடரட்டும் அருட்பணி.
- கே. அகிலா, மதுரை.

திருப்பூர் கிருஷ்ணனின் தொடர், பரமேஸ்வரனும் பஞ்சபூதங்களும் சிவராத்திரி வகைகளின் விளக்கம், கூரத்தாழ்வார், இரு வரியில் தசாவதாரம், பாலா திரிபுரசுந்தரி, குருபரம்பரை தோன்றிய விதம் என எதை முதலில் படிப்பது என்றே தெரியவில்லை. அத்தனை பக்கங்களையும் படித்து விட்டுத்தான் புத்தகத்தை கீழே வைத்தேன். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக, அருமையாக உள்ளது
ஆன்மிகம் பலன்.
- எஸ். ராமதாஸ், சேலையூர்.

அட்டை டூ அட்டை தெய்வீக மணம் கமழும் ஆன்மிகம் பலன் இதழ் வாசகர்களுக்கு கிடைத்த ஆன்மிக பொக்கிஷம். மாதமிருமுறை வந்தால் மேலும் மகிழலாம். தினகரன் குடும்பத்தில் ஓர் தெய்வீக பொன்னேடு.
- பி.ஆர். காளீஸ்வரன், திண்டுக்கல்.

முழு முதற்கடவுளையும் முருகப்பெருமானையும் அரணாகக் கொண்டு 84 பக்கங்களையும் ஆன்மிகப் புடம் போட்டு உள்ளுறை அத்தனை கட்டுரைகளும் இறைமையொளி ஏந்தி அருள் அற்புதத்தை நிலை நிறுத்துகின்றது ஆன்மிகம் பலன். ராசி பலன்கள் பகுதி 3டி படம் போன்று சகல விளக்கங்களுடன் கணிக்கப் பட்டிருப்பது போற்றுதற்குரியதாகும்.
- எஸ். ஆதிகேசவன், சாத்தூர்.

திரும்பத் திரும்ப வாசித்தாலும் திருப்தி ஏற்படாத திருப்பூர் கிருஷ்ணனின் தித்திக்கும் மகாபாரத இதிகாசத்து மன ஒருமைப்பாட்டில் விளைந்த பார்த்திபன்-பாஞ்சாலி திருமண நிகழ்வு, உளத்திரையில் திரைப்படமாய் ஓடக் கண்டு களிப்புற்றேன். இலக்கு எய்தலின் சூட்சுமத்தைப் புலப்படுத்துகிறது இக்கட்டுரை.
- ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.

பரமேஸ்வரனிடம் அடங்கியிருக்கும் ஐந்து பிராணன்களையும் பத்து தத்துவங்களாக ஐந்து ஆலயங்களில் அவர் அருட்பாலிப்பதையும் படித்து பரவசம் அடைந்தோம். அத்தலங்களை தரிசிக்கும் சூழலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
- பகவதி ப்ரவீண், சென்னை-91.

ஆயிரம் ஆயிரம் ஆன்மிக செய்திகள் சொல்லும் ஆதவா போற்றி. அன்னதானம் அளிக்கும் அணையா அடுப்பிலிருந்து அனைத்து செய்திகளிலும் பக்தி மணம் கமழ்கிறது. சுப்ரமண்ய கராவலம்பம் துதியை மனப்பாடம் செய்து தினமும் காலையில் துதித்து வருகிறேன். ஆன்மிகம் பலன் படித்து தெளிவு பெறுஓம்.
- இ. தமிழ்மொழி, சிலட்டூர்.

என் வயது 82. இதுவரை நான் வாங்கிப் படித்த பக்தி இதழ்களில் ஆன்மிகம் பலன் மிக மிக அருமையாக அமைந்திருக்கிறது. அதிலும் நடுப்பக்கத்தில் வெளியிட்ட சுப்ரமண்ய கராவலம்பம் எங்குமே காண முடியாத அற்புதமான துதி. அட்டையில் இடம் பெற்றிருந்த தெய்வீக படங்கள் அருமை. தொடரட்டும் தெய்வீகப் பணி.
- கே.வி.கிருஷ்ணன். தஞ்சாவூர்.

சிவராத்திரியைப் பற்றிய செய்திகள் மட்டுமின்றி ஆன்மிகச் செய்திகள் அனைத்துமே தெளிவுபடுத்தும் விளக்கங்களாகவே உள்ளன. அதில் வரும் செய்திகளை சான்றுகளாகவும் பயன்படுத்தலாம்.
- இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி.

சிவராத்திரி திருத்தல தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். மகாசிவராத்திரி தகவல்கள் அருமை. பக்தித் தமிழில் தசாவதாரங்களின் படங்கள் கட்டுரைக்கு பெருமை சேர்த்தன. பெருமாள் கோயிலில் தைப்பூசத்திருவிழா பற்றி படித்து வியந்தேன்.
- ஏ.என்.சுப்பிரமணியம், குடியாத்தம்.

ஆன்மிகம் பலன் இதழ் அற்புதமாக இருக்கிறது. பவானி மாமியின் மூலம் தைப்பூசவிரத மகிமையை அறிந்தோம். இந்த சூப்பர் இதழின் தொடர் வாசகியாக இனி நான் மாறிவிட்டேன்.
- டி.எம்.பானுமதி, சென்னை.

மாத ராசிபலன்களில் ஒவ்வொரு ராசிக்கும் அச்சாரங்கள் சொல்லித் தெரியப்படுத்தியது ஆச்சரியம். இதுவரை யாரும் தொடாத அரிய விஷயம் இது. அட்டையில் பிரதோஷ நாயகனையும் உள் அட்டைகளில் பிள்ளையார், முருகரையும் சிவ குடும்பமாக தரிசிக்க வைத்துவிட்டீர்கள். நன்றி.
- சுகந்திநாராயணன், சென்னை.

வடலூர் வள்ளலார் சபை பற்றி படித்து மகிழ்ந்தோம். அத்தாளநல்லூர் பெருமாள் கோயில் தைப்பூசத்தை படித்து வியந்தோம். அரசர்கள் வளர்த்த ஆன்மிகம் வரலாற்று ஆராய்ச்சி தொடர் படித்து நெகிழ்ந்தோம். குரு பரம்பரை தொடர் படித்து மனம் குளிர்ந்தோம். நன்றிகள் கோடி.
-சி.பா. சந்தான கோபாலகிருஷ்ணன், மஞ்சகுப்பம்.