கும்பம்



Anmega palan 
magazine, Anmega palan monthly magazine, Tamil 
Magazine Anmega palan, Tamil magazine, Tamil Monthly magazine, Monthly 
magazine

   முறையான பேச்சால் அனைவராலும் ஏற்கத் தக்கவரான கும்பராசி நேயர்களே! மனைவியின் வயிற்று உபாதைகள் மற்றும் வீட்டைச் சீர்படுத்த வேண்டுமே என்ற கவலைகளுடன் இந்த மாதம் தொடங்குகிறது. பெண்ணுக்கு திருமணம் நடைபெற குரு-சுக்கிரன் அமைப்பு துணை செய்யும். துர்க்கை ஆராதனை நிறைந்த பலனை அளிக்கும். இந்த மாதம் வீட்டில் பணத்திற்கு குறைவிருக்காது. ராகுவின் அமைப்பு மனைவியுடன் சேர்ந்து யாத்திரை செல்வதையும் விருந்துகளில் கலந்து கொள்வதையும் உறுதிப்படுத்துகிறது.

மாணவர்களுக்கு: மாணவர்களுக்குள் சண்டை ஏற்படும் என்பதை செவ்வாய் அமைப்பு உறுதி செய்கிறது. கவனமாக இருக்கவும். பெருமாள் கோயில் தீர்த்தம் அருந்துவது நல்லது. 25ம் தேதி வரை கேளிக்கைகளில் ஈடுபடத் தோன்றும்; தவிர்க்கப் பாருங்கள்.

விவசாயிகளுக்கு: விவசாய உபகரணங்கள் சேரும் யோகம் உள்ளதை சுக்கிரன் அமைப்பு தெரிவிக்கிறது.  பணவரத்துகளை புதன் அதிகரிப்பான். புளி விளைச்சல் நல்ல லாபம் தரும்.

உத்யோகஸ்தர்களுக்கு: சூரியன்-சனி அமைப்பு அதிகாரிகளின் ஆதரவு பெறுவதை சுட்டிக் காட்டுகிறது. முடிவெடுப்பதில் தைரியமாக செயல்பட குரு உதவி செய்வார். 28ம் தேதிக்குப் பிறகு ராகு, சுக்கிரன், சனி அமைப்பு உதவியாளர்களால் தீமை விளைவதை தெரிவிக்கிறது. துர்க்கையை ஆராதித்தல் நலம். புதன்-செவ்வாய் அமைப்பினால் வயிற்று உபாதைகளால் மனைவிக்கு ஆபரேஷன் செய்ய நேரிடலாம். 28ம் தேதிக்கு பிறகு வியாபாரிகளுக்கு பருப்பு வகை தானியங்களின் வரத்து குறைவாகும். முன்னதாகவே தேவையை சரி செய்துகொள்வது நஷ்டத்தை தவிர்க்க உதவும். நவரத்தின வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு: கிராமங்களில் வீடுவாங்கும் முயற்சி உறுதியடையும். 11ம் தேதிமுதல் 14ம் தேதிவரை உறவினர்கள் வருகை உண்டு. பெண்ணுக்கு வரன் கூடிவரும். 19ம் தேதி முதல் 21ம் தேதிக்குள்ளும் 24ம் தேதி முதல் 26ம் தேதிக்குள்ளும் திருமணத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்குதல் நல்லது. 13ம் தேதி வயிற்று வலிக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சிவன் கோயில்களில் உள்ள சூரியனுக்கு அபிஷேகம் செய்தல் நலம்.

அரசியல்வாதிகளுக்கு: போட்டியில் ஜெயித்து முன்னேறும் நேரம். வியாழக் கிழமைகளில் அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பங்கேற்றுக்கொள்ளுங்கள். குருவின் அமைப்பால் எடுத்த செயல்களில் வெற்றியை  அடையலாம். பெண்களால் கலகத்திற்கு ஆட்படாதீர்கள். 25ம் தேதிக்கு பிறகு பிறரிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை.

பெரியவர்களுக்கு: 25ம் தேதிக்கு பிறகு மகன் உடல் நிலை பற்றிய கவலை தோன்றும். தேவையற்ற பேச்சுகளால் மன்னிப்பு கோர நேரலாம்.
 
அச்சாரங்கள்: 28ம் தேதிக்கு பிறகு பருப்பு வியாபாரிகள் லாபம் பெறலாம். 12ம் தேதி காலை ராகு காலத்திற்கு முன்பும் 17ம் தேதி காலை 9மணிக்கு முன்பும் 24ம் தேதி காலை 9 மணிக்கு முன்பும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட நன்று.

எச்சரிக்கை: இந்த ராசி குழந்தைகளுக்கு ஜுரம் மிகுந்த துன்பத்தை தரும். சோர்வு காணும்பொழுதே மருத்துவரை நாடுங்கள். 9ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும். 19ம் தேதிமுதல் 21ம் தேதி வரையிலும் பிரயாணங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: பெரியாழ்வார் பாசுரங்களைப் பாடுதல், கேட்டல், கஜேந்திர மோட்சம் புராணம் படித்தல், ‘‘ஆதிமூலம்’’ என்று அடிக்கடி உச்சரித்தல் நலம் தரும்.