டைரக்டருக்கு நெருக்கடி



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

      அஞ்சாமல் படமெடுக்கக் கூடிய இயக்குநர் தன்னுடைய அடுத்தபட வேலைகளைத் தொடங்கி யிருக்கிறாராம். இந்த நேரத்திலேயே அவருக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் இடையே கருத்துமோதல்கள் தொடங்கிவிட்டனவாம்.திரைக்கதை உருவாக்கத்தில் நிறைய ஆங்கிலப்படக் காட்சி களைச் சேர்த்திருந்தாராம் இயக்குநர். ஏற்கெனவே நாங்கள் வாங்கி வெளியிட்ட இரண்டு படங்களுமே ஆங்கிலப்படங்களின் தழுவல் என்கிற விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறோம்.

இது வேறயா என்று புலம்பியிருக்கிறது தயாரிப்பு தரப்பு. படத்தில் பாடல்களுக்கு இடமேயில்லை என்று சொன்னாராம் இயக்குநர். படத்தின் விளம்பரங்களுக்குப் பாடல்கள் பெரிதும் துணை யிருக்கின்றன. கண்டிப்பாக பாடல்கள் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பு சொல்ல, நெருக்கடியில் இருக்கிறார் டைரக்டர்.