மாசமா... ஆறு மாசமா...



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

    தென்னிந்திய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் நடனம் அமைத்தவர் நடன இயக் குனர் தினா. ‘கத்தாழ கண்ணால...’ பாடல் மூலம் இளசுகளை தன் நடன அசைவுகளால் சுண்டியிழுத்த இவர், தற்போது மீண்டும் தன் நடனத்தால் ஈர்த்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுக்கும் இவர்தான் நடன இயக்குனர். குறிப்பாக ‘மாசமா.. ஆறு மாசமா...’ பாடல் இவருக்கு புகழ் மேல் புகழ் கொடுத்துள்ளது.

‘‘எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சரவணன் ஆகியோருக்குதான் முதல் நன்றி. காதலின் வெற்றியை சொல்லும் ‘மாசமா...’ பாடலுக்கு ஹீரோ தோளை குலுக்கி நடனமாடி யிருப்பார். இந்த அசைவு இன்று ஸ்கூல் பசங்க முதல் டீன் ஏஜ் பசங்க வரை சென்றடைந்திருப்பது மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுத்துள்ளது’’ என்று சொல்லும் தினா, தற்போது ‘அம்புலி 3டி’, ‘மல்லுக்கட்டு’ உள்பட கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.
எஸ்