போக்குவரத்து நெரிசல் என்கிற பெயரில் கேரள தேசத்தில் உருவாகி வெற்றிபெற்ற படத்தின் தமிழ் மொழிமாற்றத்தில் உலக நடிகர் நடிப்பதாக சொல்லப்பட்டது. முதலில் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகர், படப்பிடிப்புக்கான பூர்வாங்க வேலைகளைச் செய்து கொண்டிருந்த நேரத்தில் மறுத்துவிட்டாராம். வேறொரு பெரிய நடிகரை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு ராவண நடிகரைச் சந்தித்தார்களாம்.
அவருக்கு இந்தப்படத்தைத் தமிழில் செய்ய ஆசை இருந்ததாம்.ஆனால் முதலில் தன்னிடம் வராமல் உலக நடிகர் மறுத்தபிறகு வருகிறார்கள் என்கிற காரணத்தினால் வரிசையாக நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கின்றன. எனவே இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகளே கொடுக்கமுடியாது என்று சொல்லியனுப்பிவிட்டாராம்.