கோலிவுட்டில் கவனிக்கத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.ஜி.முத்தையா. ‘பூ’, ‘கண்டேன் காதலை’, ‘நாடோடிகள்’ (தெலுங்கு), ‘அவள் பெயர் தமிழரசி’ என்று தன்னுடைய எல்லா படங்களிலும் தனி முத்திரை பதித்தவர். சமீபத்தில் தன் கை வண்ணத்தை காட்டிய படம் ‘வந்தான் வென்றான்’.
‘‘திருச்சிதான் எனக்கு சொந்த ஊர். விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் முடித்ததும் ஒளிப்பதிவாளர்கள் ராஜரத்தினம், ரவிவர்மன், கதிர் ஆகியோரிடம் தொழில் கற்றுக் கொண்டேன். என்னுடைய டிரைலர் பார்த்த இயக்குனர் சசி ‘பூ’ பட வாய்ப்பு கொடுத்தார்.
தொடர்ந்து இயக்குனர் கண்ணன் நட்பு கிடைத்தது. அவருடன் தொடர்ந்து இரண்டு படங்கள் பணியாற்ற முடிந்தது.
டிஜிட்டல் கேமராவில் ப்ளஸ், மைனஸ் இரண்டும் உண்டு. ஆனால், இனி டிஜிட்டல் கேமராவின் ஆதிக்கம்தான் இருக்கும்’’ என்று சொல்லும் பி.ஜி.முத்தையா, “கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு தான் என்னுடைய ஸ்டைல்’’ என்கிறார்.
எஸ்