அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளின் அலம்பல்களை அம்பலப்படுத்தும் பத்திரிகை நிருபரின் கதை.
வெகு இயல்பாக நடித்து ‘வெரிகுட்’ வாங்குகிறார் ஸ்ரீகாந்த். சிரிப்புக்கும் சோகத்துக்கும் முகம் ரொம்பவே ஒத்துழைக்கிறது.
சோனியா அகர்வால் பாடலில் அழகாகவும், காட்சி களில் அருமையாகவும் நடித்துள்ளார்.ஜெயில் சூப்பிரண் டென்டென்ட் கணேஷ் யாதவின் வில்லத்தனத்தை ரசிக்கலாம்.
சரண்யா பொன்வண்ணன், வினோதினி கேரக்டர்களில் குறையொன்றுமில்லை.நிருபருக்காக எதையும் செய்யும் எடிட்டராக மணிவண்ணன், அரசியல்வாதியாக இளவரசு, பெண்டாட்டிதாசனாக மனோபாலா, கைதியாக டி.பி.கஜேந்திரன் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் தங்களது வேலையை நிறைவாக செய்துள்ளனர். போஸ்வெங்கட் கடைசிக் காட்சியில் மனதைத் தொடுகிறார்.
திவாகரின் ஒளிப்பதிவு தித்திப்பு. வித்யாசாகரின் மெல்லிசையில் நான்கு பாடல்களும் நச்.பாடம் நடத்தாமல், சமூக அவலங்களை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் கரு.பழனியப்பன்.